1962 Pasam / jal ja...
 
Notifications

1962 Pasam / jal jal enum salangai oli  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 3 months ago
Posts: 42
06/04/2020 4:24 pm  

1962 Pasam / jal jal enum salangai oli

சிங்கார வேலனே தேவா .. பாடலுக்கு பிறகு , அதிகம் கேட்டிராத குரலாய் இந்தப் பாடல் ஜானகியம்மாவின் குரலில் என்னை மிகவும் கவர்ந்தது . வானொலியில் கேட்டே ரசித்தது . கவியரசர் , காதல் பாடல் வரிகள் , அவரின் எழுத்து நடை மிகவும் அழகு . மெல்லிசை மன்னர்கள் இசையில் ....

ஆ..ஆ... ஆஹா ஆஅ... ஹோ..ஹோ ...என்ற ஹம்மிங் ... மிக அழகான ஒரு மென்மையான சந்தோஷத்தோடு இழையோடியிருக்கும் ..
"ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி,
சல, சல, சல, வெனச் சாலையிலே,
செல், செல், செல், எங்கள் காளைகளே,
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே, "
இரட்டைக் கிளவியின் ... சொல்லாடல்களில் பாடல் ஆரம்பம் ... தனியாக நாயகி ...சரோஜாதேவி அவர்கள் ஒற்றை மாட்டு வண்டியோட்டிக் செல்லும் போது பாடும் பாடல் . தனது காதலனை நினைத்து ..அவனை திருடனாகவே மனதில் வரித்துப் பாடுவதாக பாடல் அமைந்திருப்பது ... கவியரசரின் புலமைத் திறன் .

"காட்டினில் ஒருவன், எனைக் கண்டான்,
கையில், உள்ளதைக் கொடு என்றான்,
கையில், எதுவும், இல்லையென்று,
கண்ணில், இருந்ததைக், கொடுத்து விட்டேன்,"...
திருடனிடம் தனது மனம் பறிபோனதை என்ன பங்காகச் சொல்லியிருக்கிறார் ..

அடுத்து,

"அவன் தான், திருடன், என்றிருந்தேன்,
அவனை, நானும், திருடி விட்டேன்,
முதல், முதல், திருடும் காரணத்தால்,
முழுசாய்த் திருட, மறந்து விட்டேன்,"

மனதில் மெலிதான ஒரு நகைச்சுவையுணர்வு பாடலைக் கேட்கும்போது நமக்கு .. ஜானகியம்மாவின் இளமை கொஞ்சும் குரல் ..நல்ல ரசனையோடு . மேலும்

"இன்றே, அவனைக், கைது செய்வேன்,
என்றும், சிறையில், வைத்திருப்பேன்,
விளக்கம், சொல்லவும், முடியாது,
விடுதலை, என்பதும், கிடையாது,"

காதல் வயப்பட்டு , உறுதிப்பாடான உணர்வுகள் .. தெறித்து விழும் அழகு அந்த மென்மையான குரலில் ... மிதமாக நமது நெஞ்சில் அப்பிக் கொள்ளும் . பாசம்   ..எனும் திரையில் வெளிவந்த பாடல் . இசையமைப்பில் ..வண்டிச் சத்தமும் ... சாலையில் கடந்து போகும் வேகத்திற்கேற்ற இசை மாறுதலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் .

கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=59Yz52vKkGs

 


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 121
08/04/2020 3:35 pm  

 

வணக்கம் சகோதரி

உண்மை . நீங்கள் சொன்னது போல் திருமதி ஜானகியின்  பாடல்களில் இது முதன்மை இடத்தை பெரும் பாடல்களில் ஒன்று என்றால் மிகையாகாது
என்னைப் பொறுத்தவரை திருமதி ஜானகிக்கு எண்ணிக்கையில் MSV குறைவான பாடல்களே கொடுத்து இருந்தாலும் அனைத்தும் சத்தான பாடல்களே .
80 களில் மத்திமதில் அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை கூடியதே தவிர .தர வரிசையில் இடம் பெற்றப் பாடல்கள் மிகக் குறைவே
இந்தப்பாடலைப் பொறுத்தவரை பல்லவியும் அதனை திரும்பி பாடுகையில் முடியும் விதம் மாறுபட்டு இருக்கும்
சலங்கைஒலி ஈ ஈ எனவும் அடுத்ததடவை சலங்கை ஒலி எனவும் பாடப்பட்டிருக்கும் .
மிக அருமையாக திருமதி ஜானகி இப்பாடலைப் பாடியிருப்பார்
மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் நாதம் பாடல் முழுவதும் பரவி நமக்கு நல்லுணர்வை தருகின்றது
குழலும் கிளாரினெட்டும் தாளமும் அருமையாக இசைக்கப்பட்டிருக்கும்
வழக்கம் போலவே கவியரசுவின் கதை கரு இதிலும் அவரின் எளிய நடையில். பதிவிற்கு நன்றி

best Regards
vk


ReplyQuote
Share: