மெல்லிசை மன்னர்கள் ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் &ராமமூர்த்தி/ சட்டி சுட்டதடா கை விட்டதடா/1962


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

 

#கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 15

இவருக்கு தத்துவங்கள் யதார்த்தமாகவே வந்து விழும். .
பட்டினத்தார் பாடல் அடி ஒன்றை மட்டும் தொட்டு எப்படி தொடர்கிறார் பாருங்கள்.

' சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா..
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா..'

ஆலயமணி திரையில் ....

ஆமாம் தான் அறியாது பிழை ஒன்று நேர்ந்திடக் காரணமாகி. .அதுவும் திருத்தி அமைக்க இயலாத காதல் பிழை. .அதன் மறைவில் உற்ற நண்பனின் காதல் தியாகம். ..உணரும் போது நல்ல மனம் சுட்டு விடுமே. .அதுதான் இப்பாடல் முழுமையாக. .
புத்தி கெட்டு. .கெட்டு. . கைவிட்டு நெஞ்சைத் தொட்டது.

' பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்ட தடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில்
கோயில் கொண்டதடா..'

இயல்பு நல்ல மனதில். .காதல் குறி. .    உண்மை நிலை அறிய தவறுகிறது.  நண்பனுக்கு அது தியாகம் என்றாலும். .இவன் அளவில் தான் செய்த துரோகம் என மருகுகிறான். .இதையே மிருகத்தனம் என்கிறான். .தன் மறைவில் அவர்கள் இணைய வழி காண முயல. .அமைதி கிடைக்கும் என்ற நினைப்பு அவனுக்கு.

' ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்மத்தேவன் கோயிலிலே
ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்ட தடா. .'
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் &ராமமூர்த்தி அவர்கள்
இசையில் ஒரு ஆரவார சத்தத்தை ... பேய்களே என்று உணரும் வண்ணம் ஒலிக்கும்
குற்ற உணர்வுகளே ஆரவாரப்பேய்கள். .தனது முடிவில் நல்ல பயனே. .ஆலயமணி ஓசை. .கோயிலிலும் ஒலித்து நெஞ்சையும் நிறைக்கிறது. .இதுவே தர்மத்தேவன் அங்கீகாரம். .இனி மனம் சாந்தி பெறும்.

' எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா...
இது வேதனையிலும் வரும் ஒரு நையாண்டி. .
எறும்புக்கிணை யான உள்ளம் தெளிவுற. .யானைபலத்திற்கிணையான சோதனைகள் வரவேண்டுமா என்ன?
கவியரசரின் தனித்துவமான கற்பனை வளம் தத்துவங்களில் மின்னும் .

' என் இதயத் தோலை உரித்துப்
பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்குமுன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும்
அமைதி வந்துவிட்டதடா. ."

இங்கு பொருளின் ஆழம் பின்னனியில் ஒலிக்கும் பேரலைகள் போன்று நம்மைப் புரட்டிப் போடக்கூடியது.
நல்ல தீர்வு என நினைத்து பெறும் தெளிவு. .கருவறையுள் இருக்கும் குழந்தையின் மனநிலை ஒத்தது. காணுகின்ற அமைதியோ...
இறந்த பிறகு ஒரு ஆன்மா. .அடையும் நிறைவை ஒத்தது.
இது இவன் தன்னால் உற்ற நண்பனின் உயிர்க்காதலுக்கு ஏற்பட்ட தீமையை இவ்வண்ணம் எண்ணிப் பார்க்கிறான். .
காதலா. ..? நட்பா..? நமது சிந்தைக்குமே ஒரு சவால் தான்.
சிவாஜி நடிப்பு பாவங்கள். .டி.எம்.எஸ். ஆண்மை குறையாத வருத்தத்தில் உழலும் பாவம். .மெல்லிசை மன்னர்கள். .இசையின் மேன்மையை. .கடல் பேரலைகளின் பின்னனியில். ..
கவியரசின் கம்பீரம் குறைக்காத..உணர்வுச்சாடல்கள். . அவரே. ..அவரே. .நிற்கிறார். .

கோதைதனபாலன்
: http://youtu.be/jxLwg6vf8jI 1962


Quote
Share: