MSV &TKR/' அத்தான்....
 
Notifications
Clear all

MSV &TKR/' அத்தான்... என் அத்தான்/பாவமன்னிப்பு 1961  

  RSS

kothai
(@kothai)
Trusted Member
Joined: 10 months ago
Posts: 73
17/02/2021 3:53 pm  

#கவியரசர்கண்ணதாசன்பாடல்கள்ரசனைகள் .. 28

பொதுவாக எல்லா மொழியியல் களிலும் ஆண் பெண் உணர்வுகள் அழகாக பல்வேறு கோணங்களிலும் பேசப்பட்டிருக்கும்...அவரவர் கலாச்சார பண்புகளை ஒட்டி. ஆனால் இங்கு நமக்கு .. ஒரு சிறிய அளவில் நளினமான உணர்வுகளைத் தொகுத்தளித்த விதம்..பரவசத்தை தூண்டும் வண்ணம் ...சற்று விரிவாக்கமாய்.... ஆம்...அதைத் தான்.. தான் ..நான் இங்கே சொல்ல வந்தேன்...கவியரசரால் மட்டுமே சுவைப்பட .... தானாக அடுக்கி வந்த விந்தைதான்...மெல்லிசை மன்னர்களை மயக்கி...அவர்கள வழியே சுசீலாம்மாவின் குரலில் ... இம்மியளவும் பிசகாத நாணம்..நளினம்...அடக்கமாய் ஆனால் அழுத்தமாய்...இந்தியத் திரைஇசை உலகிலேயே ...முத்திரை பதித்தது.. பாவமன்னிப்பில்..

சாவித்திரி அம்மாவும் ...தேவிகாவும்...சளைத்தவர்களா...பாவங்கள் காட்டி நம்மைப் பரவசப்படுத்த...

தோழிகளுக்கிடையில் ...தங்கள் காதலன் பற்றிய உணர்வுகளை..ஒளிவு மறைவில்லாது.. சொல்லுதலிலோ...சீண்டிப் பார்ப்பதிலோ...ஒரு நயமான ,அழகு...இருக்கவே செய்யும்...அதை எப்படி இப்படி ஒரு...கற்பனைக் காட்சி அமைப்பு என்றே கொள்வோம்.. எளிமையாக...அழகான ஒருமித்தொலிக்கும் சொற்றொடர்களால் ...எழுதியிருக்கும் நேர்த்தி மிகவும சுவையானது.

' அத்தான்... என் அத்தான்
அவர் என்னைத்தான்......
எப்படிச் சொல்வேனடி...?
கையைத்தான் கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்..
எப்படி சொல்வேனடி..

தோழி தன்னிடம் விவரிப்பது போல் இந்தத் தோழியே பாடுகிறார்...அந்தக் காதல் சந்திப்பு எப்படி என்று...
கணவனாக வரும் முறையுள்ளவர்...அத்தான் ... எனும் சொல்லுக்குரியவர்..
என் அத்தான் ..தான் என்றாலும் எப்படி சொல்வது... தன் கையால் கண்முடி விளையாட்டும்..
நாணம் தடுக்கிறதே..தேவிகா நிலை இதுதான் பாடல் முழுவதும்..

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்..
சென்ற பெண்ணைத்தான்..கண்டு துடித்தான்.. அழைத்தான்
பிடித்தான் ..அனைத்தான் ..
எப்படி ..சொல்வேனடி....

பாதி கதை வந்து விட்டது.. கண்மூடிய விளையாட்டில் ..சிறு பிணககு...பிறகு செல்லச் சிணுங்கல்... பிறகு அவள் மனவாட்டத்தில் அவனுக்கு ஏற்பட்ட துடிப்பு. ....பாடல் வரிகளில் இழையோடியிருப்பதை.... ரசிக்கத்தானே...நாம்...

மொட்டுத்தான் கன்னி சிட்டுததான்
முத்து த்தான் உடல் பட்டுத்தான்...
என்று தொட்டுத்தான்...கையில் இணைத்தான் ..வளைத்தான்.. பிடித்தான் அனைத்தான்..
எப்படிச் சொல்வேனடி...

தன் அழகை அவன் வர்ணிக்கும் வார்த்தைகள்.... மொட்டுத்தான்..பருவ வயது...கன்னிச்சிட்டு...காதற்பருவம் கண்டது...முத்து தான்... ஒளிவிடும் தோற்றம் ...பட்டுப் போன்ற மென்மை..
தான் ..தான் ..என்று தேனினும் இனிதான..வார்த்தைகளை...அநாயசமாகக் கோர்த்திட்ட பாங்கில்... எந்த மொழிக் கவிஞனும் மெய்மறப்பான்..நாம் ...என்றுமே.. நான் சொல்லி விட்டேன்.

இதில் ஒரு சுவராசியமான தகவல் ஒன்று அடங்கியுள்ளது . இந்தப் பாடலை இதற்கு முன்பு வேறு எதோ ஒரு படத்திற்கு கவியரசர் எழுதிக் கொடுத்திருந்தார் . அதன் நடை தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றின் வரிகள் ஒட்டியும் எழுதப் பட்டது . அந்தப் பாடல் ,கவியரசர் ஒருதரம் பயணத்தின்போது வாங்கிச் சாப்பிட்ட கடலை மடித்துக் கொடுக்கப் பட்டிருந்த காகிதத்தில் இருந்தவை .யதேச்சையாக அதைப் படித்த கவியரசர் இப்பாடலை அந்தப் படத்திற்காக எழுதிக் கொடுத்தார் .
ஆனால் விசுவநாதன் அவர்களோ இதென்ன அத் தான் , பொத்தான்
என்று இசைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார் .பின்பு பாவமன்னிப்பு திரையில் இந்தச் சூழலுக்கு அவர் மெ ட்டுப் போட, அவர் மனதில் மறுக்கப்பட்ட பாடல் வரிகள் மனதில் வர உடனே கவியரசரிடம் அதை வாங்கி இசையோடு பொருத்தினார் .இசையில் ஒரே நாதம் மட்டுமே மெலிதாகப் பின்னணியில் ஒலித்தபடி இருக்கும் . சுசீலாம்மாவின் குரல் தனித்து அதில் நீந்தி வரும் .இன்றைக்கும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஒரு இசையமைப்பு . MSV &TKR

கோதைதனபாலன்
https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 158
28/03/2021 5:36 am  

அன்பு சகோதரி
அருமையானப் பதிவு

மெல்லிசை மன்னர் இந்தப் பாடல் ஆக்கம் பற்றி சொல்லியிருந்ததை இங்கு பதிவு செய்கிறேன்
https://youtu.be/5phQ2mJeGMQ

best Regards
vk


kothai liked
ReplyQuote
Share: