1961/மலர்களைப் போல்...
 
Notifications
Clear all

1961/மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்/பாசமலர்


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

 
PART 1 
#கவியரசர்கண்ணதாசனின் பாடல்கள். .ரசனைகள். .2

பாசமலரில் அன்று..

"மலர்ந்தும் மலராத

பாதிமலர் போல வளரும் விழிவண்ணமே. ..."

எனும் பாடலின் முதல் வரியிலேயே ..   இதமான தாலாட்டின் சுவையோடு உறங்க ஆரம்பிக்கும் குழந்தையின் விழி அழகு உணரப்பட்டு. ..மனம் லயித்து விடும்.

பின்னர் இடையில் வரும். .

"நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

 நடந்த. ..இளந்தென்றலே!

வளர் பொதிகை மலை தோன்றி..

மதுரை நகர் கண்டு. ..

பொழிந்த தமிழ் மன்றமே. ..."

இந்த வரிகளை அன்று ஒன்பதாவது வயதில் மனம் ரசித்து நான் பாடிப் பார்க்காத நாளே இல்லை எனலாம். முதன் முறையாக இவரது பெயரை அப்போதுதான் அறிகிறேன்.

என்ன. .ஒரு பொருள் வளம் உள்ள பாடல்கள்.

 

இங்கு நான் எடுத்துக் கொண்ட பாடல். ..

 "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள். .."

பெற்றவர் பாசம் அறியாது உடன் பிறந்த அண்ணனையே பாசமழையின் மொத்த உருவமாய் கண்டு வளரும் தங்கை. .மன நிம்மதியுடன் தூங்கும் அழகை அண்ணனவன் கண்டு மனதில் பெருமையடைகிறான்..

காலத்தின் மாற்றம் அவனுக்கு பருவ வயதில் தான் இன்னும் அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்துகிறது. .அதுவே அவனது ஆசைக் கனவுகளாக பரிமளிக்கிறது. .

கவியரசின் கற்பனைச் சிறகுகளில். .அந்த வரிகளை ஏற்றமிகு நயத்துடன்  இசை கோர்த்தவர் மெல்லிசை மன்னர்கள். ..

உயிர்த்துடிப்பு கொடுப்பவர். ...டி.எம்.எஸ் அவர்கள். ..

கண்களில் நிறைவாய் வருபவர்கள். .நடிகர் திலகம். .நடிகையர் திலகம்.

தங்கை எந்த அமைதியில் தூங்குகிறார். ..?

......"அண்ணன் வாழ வைப்பான். ..என்று அமைதி கொண்டாள்.."

கலைந்திடும் கனவுகள் அவன் படைத்தான். .

அண்ணன் கற்பனைத் தேரினில்

பறந்து சென்றான். ".

ஆமாம் ஆசைக்கனவுகள் அவன் முன் விரிகின்றன. .நமக்கு வரியின் சூட்சுமம் புரிந்தாலும். .

அவன் கனவின் நனவுத்தோற்றம் அழகாக நம் கண்முன் விரிகிறது. .

' மாமணி மாளிகையில் மாதர்கள் புன்னகை

மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டான். .
"தமிழ்க் காப்பியங்களில் வர்ணிக்கப்பட்டவைகளை. . மறு உருவாக்கம் கொடுத்து..இங்கே நம்மையும் இலக்கியச் சுவைக்குள் தள்ளுகிறார். .

திருமண மண்டபம் அவன் கண்களில் அந்த அழகுடன். .சூழ  வந்த மக்கள் அனைவரும் மனமகிழ்ந்து புன்முறுவலித்திருக்க. ..

மணப்பந்தலில் பொன்வண்ணமாய் அவள் மிளிர்கிறாள்.

இது அவன் ஒரு செல்வச் செழிப்பில் கண்டு ரசிப்பதை உணர்த்தும். .அதை ஆமோதிப்பது போல் ..

அடுத்து

....' மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான். ...

மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான். .'

திருமணம் முடிந்த களிப்பு வந்திட....அடுத்த கனவு. ...

' ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்

அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்..

வாழியக் கண்மணி! வாழிய என்றான்...

வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்.."

திருமணம் முடிந்து துணைவருடன் கால்களில் விழுந்து ஆசிகள் பெறும் நயம். .அதற்கு முன்னம் நொடிப்பொழுதில் அவளது சிறுபிராயத்து பருவ நினைவுகள் இதமாக அவன் மனதில் தந்த சுகம். .

கவியரசர் அந்த வாழ்வின் உன்னதத்தை அப்படியே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். .அத்தோடு விட்டாரா.....சொல்லாடலில் என்ன ஒரு மணம் வைக்கிறார் பாருங்கள். .

 

' பூமணம் கண்டவள் பால்மணம் கண்டாள். ..

பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள். ..

இருவரிகளில். .அழகாக காலத்தை உருட்டி கையில் குழந்தையுடன் அவள் அவனது கனவில் பிரசன்னமாகிறாள். ..

..' மாமனைப் பாரடி கண்மணி!

என்றாள். .

மருமகள் கண்கள் தன்னில்
மாமன் தெய்வம் கண்டான்..."

ஒரு சுகமான கற்பனை உரையாடல் ..மாமனைப் பார் என்று அவள் சொல்ல. .அந்தக் கண்களில் இவனோ..தன் தங்கையையே...தெய்வமாகக் காண்கிறான். .
இப்படி கனவுப் பாடல் மூலமாக அண்ணன் தங்கை பாசத்தை ஒரு புனிதமாக. .காண்பித்தவர் நம் கவியரசர் கண்ணதாசனே.

கனவின் ஓட்டம்  எத்தன்மையது .. எவ்வாறு களிப்புடன் செல்கிறது ...என்பதெல்லாம் இசையமைப்பில் புலப்படும் .

கோதைதனபாலன்…
https://www.youtube.com/watch?v=or5UrvlXWPo


Quote
Share: