1961 பாசமலர் / வாரா...
 
Notifications

1961 பாசமலர் / வாராயோ தோழி வாராயோ 4  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
13/03/2020 5:16 pm  
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி பாடல்கள்
 
1961 பாசமலர் / வாராயோ தோழி வாராயோ 4
எல். ஆர் . ஈஸ்வரி அம்மா அவர்களை
தனித் திறமை என்று பல பாடல்களில் அடைத்தாலும் ...
 
மணக்கோலம் கண்டு , ஒரு பெண்ணின் ரசனையுணர்வை வெளிப்படுத்தும் இப்பாடல் அன்று அறுபதில் வெளிவந்த பாசமலர் திரையில் இடம் பெற்றது,
"வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண
வாராயோ
மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ "....
 
பாடலில் தான் எத்தனை பண்பு நலன்களைக் காணலாம் .
தான் விரும்பிய காதலன் கைப் பிடித்து இல்லறத்தில் நுழையும் தருணம் .. திருமணக் கோலம் .. மணப் பெண்ணை ( நடிகையர் திலகம் சாவித்திரி ) அழைத்து வரும் தோழி ( நடிகை சுகுமாரி ) தனது தோழியர் கூட்டத்தோடு பெண்ணுக்கே உரிய இயல்புகளை சீண்டி விட்டு வேடிக்கை பார்த்து , அறிவுறுத்தும் வகையிலும் , கவியரசரின் ...பொன்னான , நயமான வரிகளில் ஈஸ்வரி அம்மா தனது முதல் வெற்றியைப் பதித்து விட்டார் என்றே சொல்வேன் . காரணம் வருடங்கள் அறுபது போனபின்பும் இன்றும் திருமண விழாவில் அனைவரும் ஒலிக்கவிடும் பாடலாக இது அமைந்துள்ளது .
 
 
மெல்லிசை மன்னர்கள் ... அன்று எந்தத் திரைப்படத்திலும் எந்தப் பாடலையும் ஒதுக்கிவிடாதபடி இசை வழங்கியிருப்பர் . அதில் இப்படமும் ஒன்று .
சாவித்திரியம்மாவின் நாணம் கொண்ட முகம் பார்ப்பவர் நெஞ்சை அள்ளும். பாடலும் அதற்கு ஈடாகவே ,
 
"மணக்கோலம் கண்ட மகளே
புது மாக்கோலம்
போடும் மயிலே
குணக்கோலம் கொண்ட கிளியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை காண வாராயோ ..'
தோழி அறிவுறுத்துவதாகவே தொடங்கி ஆடிப்பாடி வருவார் . இடையில் திருமண மந்திர ஒலி கேட்கும் .
சீண்டி விடும் படலம் பாடலில் ..
 
"தனியாக காண வருவார்
இவள் தளிர் போல தாவி
அணைவாள்
கண் போல் சேர்ந்து மகிழ்வார் இரு கண்மூடி
மார்பில் துயில் வார் ..'
இப்படி பாடினால் தோழியர் சிரித்து மகிழ்வார் ...
"சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ" ....கவியரசரின் பண் பான வரிகள் கொஞ்சமும் விரசம் தட்டாமல் அமைந்திருப்பதும் , பாடும் அழகும் போற்றத் தக்கது . பின்பு நேரம் நெருங்கிற்று என காய் தட்டியும் ஆடியும் மேடைக்கு அழைத்து வருவார் .. பாடிய வரிகள் கேட்டு அன்னான் சிவாஜி அவர்களுக்கும் முகத்தில் லேசான நாணம் வர ... அருமையான காட்சி அமைப்பு .

"மலராத பென்மை மலரும்
முன்பு விளங்காத உண்மை
விளங்கும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு தெரியாத உண்மை
தெரியும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று
வளராதோ'

வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண
வாராயோ >>'
ஆஹா, என்ன அற்புதமான பாடல் ... ஈஸ்வரியம்மாவின் முத்திரை இன்னும் மெருகோடு ..என் ரசனையும் ..பழமை மாறாத புதுமைப் பொலிவோடு ..

கோதை

Quote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 105
14/03/2020 1:18 am  

 

வாராய் என் தோழி வாராயோ -"பாச மலர் " 

காலத்தால் அழியாத காவியம் ,பாடல்கள் அனைத்தும் உயர் ரகம் , கதை -கொட்டாரக்கரா , இசை வி-ரா . எம் எஸ்வி திரையில் முதலில் ஒருபாடலை பதிவிட்ட இடமும் இப்படமே .ஆம் அன்பு மலர் என்று துவங்கும் பாச மலர் டைட்டில் பாடல். இடை  வேளையில் திரை அரங்கில் ஒலிக்கும் அசரீரி வகைப்பாடல்.  சரி வாராய் என் தோழி பாடலுக்கு பல சிறப்புகள் உண்டு. ஒரு பாடலில் ஒரு இசை அமைப்பாளன் எத்துணை சம்பவங்களை நுழைக்க இயலுமோ அத்துணை வகை அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு 1961ம் ஆண்டின் விந்தை இப்பாடல். 1] பாடும் குரல் 2 ] ஆங்காங்கே சேர்ந்துகொள்ளும் கோரஸ் பெண் குரல்கள், 3] மங்கள வாத்திய இசைக்குழுவினர், 4 ] கிண்டலும் கும்மாளமும் குலுங்கும் சிரிப்பு குரல்களின் ஒலியாக , 5] திருமண மந்திரங்களின் உச்சாடனம் , 6]இவை நிறை வுறும் இடத்தில் சதன் குரலில் திருமண மந்திரம், 7 ] தாள க்கருவிகளின்  இடத்தில் , கிளாப் முறையில் கைகளில் தாளமிடும் இசை விலகாத அமைப்பு மற்றும் இவ்வனத்திற்கும் இடமும் ஈடும் கொடுத்து பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் குரலில் [முதலில் பாடிய முதல் பாடலாக இருக்கும் ] என்று அனைத்தையும் ஒருங்கிணைத்த எம் எஸ் வி யின் ஆளுமை [ராமமூர்த்தியின் உதவியுடன்]

சரி -இதனால் என்ன என்று கேட்கக்கூடிய இளம் தலை முறையினருக்கு சில தகவல்கள்.

இவை முழுவதும் லைவ் ரிக்கார்டிங் எனப்படும் நேரடி ஒலிப்பதிவில் பதிவிடப்பட்டது. நேரடி ஒலிபதிவில் உள்ள கொடூரம் யாதெனில் -பாடலில் எந்த இடத்தில் யார் தவறு செய்தலும் , மீண்டும் பாடல் முதலில் இருந்து துவங்கி அத்துணை பகுதிகளும் சரியாக பாட, இசைக்க ப்பட்டு பதிவிடுதல் நடை பெறும் . இதனால் பங்கு பெரும் அனைத்து கலைஞர் களுக்கும் சோர்வும் வெறுப்பும் மேலிடும், இசை அமைப்பாளருக்கு கோபம் கொப்பளிக்கும். இத்துணை மனித பண்புகளுக்கும் ஈடு கொடுத்து பதிவிடும் ஒலி பொறியாளருக்கு நேரமும் வீணாகும். ஒலி அரங்கில் சரியாக பதிவிட்ட பின்னரே அதை கிராமபோன் இசை தட்டுகளாக மாரு பதிவிட முடியும். இக்காலம் போல் , வெட்டி ஒட்டும் கணினி உத்திகள் எதுவும் இன்றி முற்றிலும் மனிதத்திறமை யைக்கொண்டே உருவான பாடல்கள். ஆனால் அவற்றின் நேரடிப்பதிவில் கிடைத்த உயிரோட்டம் இன்றைய கணினி  பதிவில் இல்லை என்பதே அன்றைய பாடல்களின் நீடித்த ஆயுளுக்கு அடித்தளம். இவ்வாறாக "வாராய் என் தோழி" 45 முறைகள் ரிப்பீட் ஆகி இறுதியில் ஒரே டேக் இல் முடிவுற்றதாக அன்றைய செய்திகளில் கேள்விப்பட்டுள்ளேன். வாய்ப்பிற்கு நன்றி.

அன்பன்   ராமன்  மதுரை 


Kothai liked
ReplyQuote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
14/03/2020 3:25 pm  

@k-raman நன்றி .. இன்னும் மேற்கொண்ட தகவல்கள் தந்தமைக்கு .

 


ReplyQuote
Share: