“ பாவ மன்னிப்பு” "ப...
 
Notifications
Clear all

“ பாவ மன்னிப்பு” "பாலிருக்கும் பழமிருக்கும் " [ கண்ணதாசன் ]  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 212
18/11/2020 1:13 pm  

  "பாலிருக்கும் பழமிருக்கும் "      பி. சுசீலா -எம் எஸ் விஸ்வநாதன்       

ஆண் பெண் வேறுபாட்டினை நிறுவும் ஒரு உபாயமாக ஆணின் பங்களிப்பு ஆங்கில எழுத்துக்களில் அமைக்கப்பட்டுள்ளன.

பல்லவி:   பாலிருக்கும்  huhoom     பழமிருக்கும் huhoom      பசி இருக்காது  ohho

                  பஞ்சணையில் காற்று வரும்        தூக்கம்வராது  hoo hu hoom      தூக்கம்வராது      

                  பஞ்சணையில் காற்று வரும்        தூக்கம்வராது        தூக்கம்வராது     

நாலு வகை குணமிருக்கும்hoho ஆசை விடாது ths ch ch    oohu hu hoom                                                                                            நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது           

பல்லவி    

[இந்தமுறை பல்லவி நிறைவுபெறும் நிலையில் நடிகர் திலகத்தின் விழி மொழியை பாருங்கள்] 

கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத்தேடும் 

பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் hoo hu hoom

பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்  கொண்ட பள்ளியறை

பெண் மனதில் போர்க்களமாகும் hoo hu hoom hoo huhu hoom

கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத்தேடும் 

 கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்

பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்  கொண்ட பள்ளியறை

பெண் மனதில் போர்க்களமாகும் hoo huhu  hoom

 

பல்லவி

காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே hoo hu hoo hoom

காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே

சிறு இடைவெளி விட்டு         தக் தக் என்று தாளம் கிளம்ப, தேவிகா சிவாஜியின் கைகளில் இந்த தாளத்தின்  நயத்திற்கேற்ப மெல்லத்தட்டி

வேத மெல்லாம் காதலையே மறுக்கவில்லையே

அது மேகம் செய்த உருவைப்போல மறை வதில்லையே  

பாலிருக்கும்       பழமிருக்கும்       பசி இருக்காது  

பஞ்சணையில் காற்று வரும்        தூக்கம்வராது        தூக்கம்வராது     

தூக்கம்வராது      hoo huh hu hoom

   எனது முன்னுரையில் தெரிவித்திருந்தது போல இந்தப்பாடல் பல சிறப்புகளின்  மையம்.     உடல் மொழியை விஞ்சி , வஞ்சியின் விழிமொழி வலிதெனில் , வஞ்சியின் , வாஞ்சையை வென்றெடுக்கும் நடிகர் திலகத்தின் விழி, மொழி இரண்டிற்கும் ஒருசேர ஒலித்த மன்னரின் நளின ஹூ ஹு ஹு ஹூம் மற்றும்  த்ஸ் த்ஸ் ஒலி புதிய வகை இசை யாப்பு - என்ன  அதீத கற்பனை.                                              

இப்பாடலின் இசை துவக்கத்தில் பல்லவியின் நடையிலேயே அமைக்கப்பட்டு நம்மை நடிப்புக்களத்திற்குள் அறிமுகம் செய்ய, நாம் எளிதாக பாடலில் சங்கமிக்கிறோம். இப்பாடலில் சொல்லாட்சியில் நம்மை அமிழ்த்துவது என்னவோ மெல்லிசை மன்னர் தான். [சொல்லாட்சி – கண்ணதாசன்]

வராத தூக்கத்தை விவரித்து வியாபித்து பாட மனமின்றி "வராது" என்ற சொல்லை மேம்படுத்த தூக்கம் என்ற சொல்லை தூக்கம் என்று குறுக்கி பாடுவதை நன்கு கவனியுங்கள் . அதை தேவிகா சிறப்பாக உள்வணங்கி அற்புதமாக 'தாபத்தை வெளியிட , சிவாஜி கணேசன் கண்களை அகல விரித்து வியப்பின் மேலீட்டை காட்டி ஹூ ஹு ஹூஹூம் என்று மௌனமொழியாக நாயகியை [மோதாமல்] ஆமோதிக்கிறார். இவ்விருவர் [தேவிகா -சிவாஜி ] வென்றனரா  , அவ்விருவர் [ சுசீலா -எம் எஸ் வி ] வென்றனரா அன்றி வேறிருவர்            [ கண்ணதாசன் - மெ .மன்னர்கள் ] வென்றனரா? விடை எளிதல்ல.                         ஆனால் பாடலில் மூழ்குதல் என்றென்றும் ஒரு பசுமை சுகம்.                                          

                   நன்றி.               ராமன் மதுரை

    


Quote
Share: