TMS தொடர் என் ரசனையில் ..37
வாழ்க்கை முறையில் சில தத்துவம் பாடல்கள் .. கவிஞர் எழுதி விடுவார் .. இசையமைப்பாளர் ராகமேற்றி வைப்பார் .. பாடியவர் உச்சரிப்பு சுத்தம் இருந்தாலே பாடல் கருத்து மனதில் பதியும் ..என்றென்றைக்கும் நிற்கும்.
மெல்லிசை மன்னர்கள் தத்தம் இசையில் உச்சரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவர் ..
அப்படியான ஒரு பாடல் ஐயா பாடியது பாவமன்னிப்பு திரையிலிருந்தே..
நாயகன் இஸ்லாம் மதம் தழுவியவன். ஒருபொழுதில் தன் சுற்றம் நட்பு இவர்களுடன் அல்லா வை வணங்கிப் பாடுகிறான். அனைவரும் உற்சாகமாய் அப்பாடலில் பங்கு பெறுகின்றனர்.
வாழ்வில் பிறமதத்துடன் சேர்ந்த வாழ யத்தணிக்கும் போது கவனித்த சில குணங்களை நயமாகப் பாடலில் எடுத்துச் சொல்லி வருகிறான்..
இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர்கள் ...
சிவாஜி நடிப்பில் .. கண்ணதாசன் வரிகளில் ஐயா சொல்லவும் வேண்டுமோ ?
உற்சாகம் கைகொண்டு தட்டினால் மனம் ராகமிடும் ...
முற்பகுதியில் தொகையாக ஒன்று பாடுவார் .. பிறகே உற்சாகமாய் பாடலுக்குள் நுழைவார்..
எல்லாரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
......
மனிதன் வாழ்வில் தினசரி படும் சிரமங்களை , தட்டி விட்டேன் தட்டி விட்டேன் என்று செல்வதாய்,
உற்சாகம் இழக்காத வண்ணம்,
"கல்லாகப் படுத்திருந்து
கழித்தவர் யாருமில்லை
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபமில்லை"
பிறகு ஒரு வேகம் ... துணிவு தெறிக்கும் பாவத்தில்
"வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்"
இப்படிப் பாடுவதில் என்ன ஒரு ஆனந்தம்.
அடுத்து நினைவைப் கருவறுக்கும் ஒரு சிந்தனை யோசனையுடனே ...
அமைதியாக பாடுதல்... நீட்டிய குரலில் வருத்தம் மறைவில் களையாக ஓடும்..
"நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா..ஆ..'
நான் சொல்வது சரிதான் என ஒரு உத்வேகம் குரலில் எழும்ப ,
"கறுப்பில்ல, வெளுப்பில்ல
கடவுளுக்கு உருவமில்ல
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு
ஒன்றாய் கூடுவோம்"
ஆம் .. மதநல்லிணக்கம் காண முயலும் வரிகள்..
அடுத்து ..உண்மையை ஏற்கும் வகையில் வார்த்தைக்கு அழுத்தம் வேண்டுமே ..
அதே நூறாக யோசனையில்..
"ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா ...?
ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ..ஓ"
இங்கு மனதில் லேசான ஓலம் .. கதறும் நெஞ்சம்
பிறகு ஒரு தீர்க்கம்...
எல்லாம் பாடலில் பிசிறில்லாமல் வர ..
"படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்..'
நம் மனம் ஒரு பரவசத்துடன் இருப்பதை பாடல் இறுதியில் உணர்வோம்.
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி.& டி கே ஆர் இசையில் ஒரு அற்புதப் பாடல் ..இன்றைக்கும்கேட்க நல்ல சுவையானது .
கோதை தனபாலன்
https://youtu.be/TM0VmDB1dn4 See Less