1959 - அமுதவல்லி - ...
 
Notifications

1959 - அமுதவல்லி - காலமென்னும் ஆழக்கடல்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:35 am  

140. 31.01.2020

பாடல் – காலமென்னும் ஆழக்கடலில்
படம் – அமுதவல்லி (1959)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
குரல் – டி.ஆர். மகாலிங்கம் பி.சுசீலா

ஆடை கட்டி வந்த நிலவோ பாடல் மூலம் எல்லாருக்கும் அறிமுகமான படம் அமுதவல்லி. இப்படத்தில் டி.ஆர். மகாலிங்கம் இரு வேடங்களில் நடித்திருப்பார். பித்துக்குளியாக அமைச்சரின் மகனாகவும் கொள்ளைக்காரனாகவும் நடித்திருப்பார். இளவரசியை தன் மகனுக்கு மணமுடித்தால் ஏராளமான சொத்துக்கு அதிபதியாகலாம் என்கிற எண்ணத்தில் தன் பித்துக்குளி மகனை அவருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார் மந்திரி. அந்த மகனுக்கு காக்காய் வலிப்பு நோய் உண்டு. திருமண நேரத்தில் அந்த வலிப்பு வந்து பாதிக்கப்படுகிறான் மந்திரியின் மகன். தற்செயலாக அந்த கொள்ளைக்காரனைப் பார்க்கும் அமைச்சர், உருவத்தில் அச்சு அசலாக அவன் தன் மகனைப் போலவே இருப்பதைப் பார்த்து திகைக்கிறார். உடனே அவர் மனதில் வஞ்சக எண்ணம் தோன்றுகிறது. ஓரு நாளைக்கு மட்டும் இளவரசியின் கணவனாக நடித்து அவளுக்குத் தாலி கட்டச் சொல்கிறார். அவனும் அதற்கு சம்மதிக்கிறான். தாலி கட்டுகிறான். ஆனால் அடுத்த கணமே மந்திரி அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து கொல்லி மலைக்கு நாடு கடத்துகிறார். இங்கே தன் மகனை இளவரிசியின் அந்தப்புரத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்புகிறார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு திருப்பங்களுடன் கதை செல்கிறது.

தன் காதலன் பிரிவை எண்ணி வருந்தும் அமுதா, எப்படியோ அவனைக் கண்டு பிடித்து விடும் நோக்கில் அலைகிறாள். அதில் ஒரு கட்டமாக மாறு வேடத்தில் குறத்தியாக வலம் வருகிறாள். அவளுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் வகையில் காதலனை சந்திக்கிறாள். அவன் அவளை எண்ணியே வாழ்வதை அறிந்து அவனிடம் உண்மையை சொல்லி விடுகிறாள். அவனோ, தன்னால் அந்த இளவரசியின் வாழ்வு வீணாவதை விரும்பவில்லை. திரும்பிப் போகும்படி அவளிடம் கெஞ்சுகிறான். அவளோ அதை ஏற்க மறுத்து வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் வாழப்போவதில்லை எனக் கூறி விடுகிறாள்.

இந்தக் கட்டத்தில் தான் இன்றைய தேர்வுப் பாடல் படத்தில் இடம் பெற்றுள்ளது.

இசையரசி சுசீலா அவர்கள் டி.ஆர். மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து பாடிய இப்பாடல் கேட்போர் நெஞ்சில் உடனே இடம் பிடிக்கும் தன்மை வாய்ந்தது. மன்னரின் இசையில் இசைக் கோர்வையில் இடம் பெற்ற கருவிகள் காட்சியின் சிறப்பைக் கூட்டுகின்றன. பாடலின் தாளக்கட்டு வித்தியாசமாக, கஜல்களை நினைவு படுத்துகின்றன. இடையிடையே வரும் தாளக்கட்டு வித்தியாசமானவும் அருமையாகவும் அபவங்களை நினை வுடுத்துகின்றன.

இன்னொரு சிறப்பான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:36 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது


ReplyQuote
Share: