Notifications
Clear all

1957 - Pudhaiyal - Kandirajan Therukkoothu  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 112
24/09/2019 5:09 pm  

பாடல் : கண்டி ராஜன்  தெருக்கூத்து

படம் : புதையல்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா  தாஸ்

இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எம்.கே.புனிதம், குழுவினர்

வருடம் :  1957

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது "புதையல்" படத்திலிருந்து ஒரு அரிய பாடல்.  இந்த பாடல் படம் வெளியான போது போதிய வரவேற்ப்பு பெற்றதா என்று தெரியவில்லை.  இருந்தாலும் எனது சிறு வயதில் எப்போதாவது இந்த பாடல் ஒலித்த போது கேட்ட ஞாபகம்.  காலப்போக்கில் ஏனோ இந்த பாடல் மறக்கப்பட்டுவிட்டன.  தொலைக்காட்சியில் கூட இந்த பாடல் அடிக்கடி ஓளிபரப்பட்டதாக தெரியவில்லை.  இதற்க்கு பிறகு வெளிவந்த நவராத்திரி  படத்தில் வரும் தெருக்கூத்து பாடல் பெற்ற வரவேற்ப்பு இந்த பாடலுக்கு கிடைக்காமல் போனது தான் ஏனோ.  In fact, this is the forerunner for all such songs which came later. 

சிவாஜி, பத்மினி காதலர்கள்.  இவர்கள் காதலை  பத்மினியின் அப்பா எதிர்க்கிறார்.  அந்த ஊர் செல்வந்தர் பாலையா.  சிவாஜி ஒரு நாள் பத்மினியிடம் தன் தங்கை தங்கம்  இங்கு தான் புதையுண்டு கிடக்கிறாள் என்று சொல்வதை அங்கு யதேச்சையாக வரும் பாலையா தவறாக அங்கு தங்கப்புதையல் உள்ளது என்று தவறாக புரிந்து கொள்கிறார். பிறகு பல சம்பவங்கள்.  பாலைய்யாவின் மனைவி எம்.என்.ராஜம்.  பாலைய்யா சூழ்ச்சி செய்து அவரை மணந்துள்ளார். எம்.என்.ராஜம் சிவாஜியை அடைய விரும்புகிறார். சிவாஜி அதற்க்கு ஒப்புக்கொள்ள மறுப்பதால்  சிவாஜி-பத்மினி காதலுக்கு இவரும் எதிரியாகிறார். பாலையா சிவாஜியை சிறைபிடித்து தனது ரகசிய அறையில் வைத்து அவரை துன்புறுத்தி புதையல் எங்கிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார்.  அவரை காப்பாற்ற வரும் பத்மினியும் அங்கே மாட்டிக்கொள்கிறார்.  பிறகு இருவரும் எம்.என்.ராஜத்தை ஏமாற்றி (அவரை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சிவாஜி பொய் சொல்கிறார்) அங்கிருந்து தப்பித்துச்செல்கின்றனர். அந்நேரம் இவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரின் திட்டப்படி பாலைய்யாவிற்கு ஓர் தாயித்து கிடைக்கிறது.  அதை திறந்து பார்க்கும் போது "அனாதையான ஓர் இளம் காதலர்களுக்கு திருமணம் செய்து அவர்களை அதே நாள் இரவில் கொலை செய்து அந்த ரத்தத்தை இந்த தாயித்து கிடைத்த இடத்தில் தெளித்தால் புதையல் கண்ணுக்கு தென்படும், இல்லையேல் இரண்டு நாளில் ரத்தம் கக்கி இறந்துவிடுவீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளதை கண்டு அஞ்சுகின்றனர். அப்போது எம்.என்.ராஜம் சிவாஜியை பழி தீர்க்க இது தான் சந்தர்பம் என்று நினைத்து "சிவாஜி-பத்மினிக்கு திருமணம் செய்து வைத்து அவர்களையே கொலை செய்து அந்த ரத்தத்தை அங்கு தெளிக்கலாம்" என்று சொல்கிறார். அதன்படி ஏற்பாடுகள் செய்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர். அன்று இரவு அதை கொண்டாடுவதற்காக ஊரில் ஒரு தெருக்கூத்து நடத்தி, ஊரார் தெருக்கூத்தில் லயித்திருக்க யாருக்கும் தெரியாமல் சிவாஜி பத்மினியை கொன்றுவிடலாம் என்று திட்டமிடுகிறார்.  அப்போது வரும் தெருக்கூத்து தான் இந்த பாடல்.  This leads to the climax. 

இதற்க்கு முன்பு சில படங்களில் தெருக்கூத்து இடம்பெற்றுள்ளன - குறிப்பாக என்.எஸ்.கிருஷ்ணன் சில படங்களில் தெருக்கூத்து காட்சியில் இடம் பெற்றுள்ளார்.  But those were totally different and never filmed in this format.  அவைகளில் பலதும் நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்தோ அல்லது சீர்திருத்த பாணியிலோ அமைந்தவை.  கே.ஆர்.ராமசாமி நடித்த சில படங்களிலும் தெருக்கூத்து காட்சிகள் இடம் பெற்றுள்ளன, குறிப்பாக மன்னர்கள் இசை அமைத்த "நீதிபதி" படத்தில் கூட ஒரு தெருக்கூத்து இடம் பெற்றுள்ளன.  ஆனால் அதுவும் இந்த format -டில் அல்ல.  ஒரு குறிப்பிட்ட கதையை எடுத்துக்கொண்டு அதை நாட்டிய நாடக பாணியில் தெருக்கூத்தாக வடிவமைத்தது இது தான் முதல் முறை என்று எண்ணுகிறேன்.  இதற்க்கு மன்னருக்கு பக்கபலமாக அமைந்தது அவருக்கு சிறுவயதில் நாடகத்தின்மேல் இருந்த தொடர்பாகத்தான் இருந்திருக்கக்கூடும்.  இலங்கையை ஆண்ட வீர சூர பராக்ரமியான ஒரு மன்னனின் கதை.

The song starts with the sound of bell, followed by introduction of the main character “கண்டி ராஜன்" by two “காவலர்கள்" in typical style, what should we call it? ("கட்டியம் கூறல்" என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.  தவறு என்றால் திருத்திக்கொள்கிறேன்) Hip-hop manner.  This starts in slow manner sung alternatively by the “காவலர்கள்" and picks up momentum and again turns to hip-hop manner and concludes by both of them singing jointly.  For this part, only Tabla is used as main percussion for rhythm, which is the vital part in Therukkoothu.  Bass Tabla plays a major role in this portion as well as throught the song.  Then comes the “bang” sound produced either using a “Gong” or the Cymbals.  Where the hero “Kandi Rajan” is introduced.  Here violin is played in a dreamy manner and a dream like effect is created through violin, cymbals and a fast run in Piano. This is quite new in these kind of songs.  This effect is created as Padmini imagines the king’s character is played by Sivaji.  Then a small silence.  Which is broken with the fast run on Tabla accompanied by Jaalra and harmonium.  Must be noted that Harmonium and Tabla, at times Mridangam, played vital part in therukkoothu – especially the “சவிட்டு ஹார்மோனியம் (Pedal Harmonium)". Here starts the prayer in the voice of TMS (need not be explained why they chose TMS for this song) – where the Raja is shown in front of a temple.  He is backed up by chorus singing “ஆ ஆ ஆ ......." in typical high pitch.  This is the usual format for a Therukkoothu.  After the prayer, the Raja while leaving the place happens to see a beautiful damsel and she is shown as frustrated, which conveys that he is a womanizer.  Here it’s filled with silence.  இதற்க்கு பின் நாட்டிய நாடக பாணி aka தெருக்கூத்து பாணி ஆரம்பமாகிறது. மன்னன் மைக்காவலர்களிடம் தான் ஒரு இளநங்கையை கண்டதாகவும், அவள் அழகையும் வர்ணணிக்கிறான் – bay way of dialogues and songs and the bodyguards reacts accordingly.  Here for the starting portion there is no percussion used.  It’s backed up by only harmonium and violin.  Which is given a break by tabla run and jalra with a stomping manner.  Which is followed by a dialogue and a loud laugh, which is not backed up by any instrument.  Then when he starts singing “ஆடும் வண்ண கலாபத்தினால்" it is backed up by harmonium, violin, jalra, Mridangam and tabla.  When the song is finished, the bodyguards asks him who is she, to which by mentioning her name orders them to bring her in front of her.  The scene changes to the damsel’s place.  The messengers express their king’s order and she responds.  Here the format is dialogues, where it has been left without any accompaniment of instruments.  And then she express her status - தங்களைப்போன்ற பத்தினிப்பெண்கள் எந்த ராஜாவின் ஆசைக்கும் வழங்கமாட்டோம், போய் கூறுங்கள் உங்கள் ராஜாவிடம் என்று.  This is conveyed in song format, with the accompaniment of Tabla, Mridangam, Violin, Harmonium and Jalra.  தூதர்கள் ராஜாவிடம் சென்று வத்திவைக்கிறார்கள்.  Raja becomes furious and yells “ஒப்பேனென்றவள் சொன்னாளா" two times without any accompaniment of instruments, to which the messengers says “சொன்னாளய்யா சொன்னாளே".  When he yells “ஒப்பேனென்றவள் சொன்னாளா" for the third time, the tempo increases and the rhythm starts, so does the violin, harmonium and jaalra.  From here the koothu turns serious and highly dramatic.  It process in the format of high voltage and sentimental dialogues and songs alternatively.  The apt usage of harmonium, violin, tabla (especially the bass) and mridangam adds the much needed dramatic element and intensity to the show.  The show ends with a shriek by Padmini sitting in front row.  Bass Tabla has played a major role in creating the appropriate moods. 

பாடல் நெடுக சிவாஜி மற்றும் பத்மினி portions -ஸுக்கு (பாடும் போது) percussion வாசிப்பில் கொடுத்திருக்கும் variations -சை கூர்ந்து கவனிக்கவும்.  குறிப்பாக "தருமராஜ இந்த ஏழை முகம் பாருங்கள்...." என்ற portion -னில் தொடங்கி கடைசி வரை percussion -னில் பிச்சு உதறியுள்ளார்கள்.  அங்கு சிவாஜி பாடும் portion -னுக்கு "Bass" subdued ஆகவும், பத்மினி பாடும் portion -னுக்கு "Bass" தூக்கலாகவும் வாசுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.  அவரின் இக்கட்டான நிலையை "highlight" செய்கிறது இந்த "Bass" – the intensity of her pathetic situation is highlighted by playing the “Bass” very strongly.  Highly applaudable. 

பாடகராக டி.எம்.சௌந்தர்ராஜனை தேர்வு செய்ததிலேயே மன்னர்கள் பாதி கிணறு தாண்டி விடுகின்றனர்.  மீதி பாதியை  பாடகி மற்றும் இசைக்கோர்வை நிறைவு செய்துவிடுகின்றன.  M.K.Punitham adds the rustic quality which the Therukkoothu demands.  The throw in her voice is highly commendable.  All in all a trendsetter kind of a song, which went unnoticed. 

மீண்டுமொரு அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை  உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடை பெறுவது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=QVKpv2ifaP8

 

Alternative link :

 

https://www.youtube.com/watch?v=o5nUTbby44E


Quote
Share: