1957 - பக்த மார்க்க...
 
Notifications
Clear all

1957 - பக்த மார்க்கண்டேயா - அக்கம் பக்கம் யாரும் இல்லே  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
26/01/2020 11:37 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

 

  1. 26.01.2020

 

பாடல் – அக்கம் பக்கம் யாரும் இல்லே

படம் – பக்த மார்க்கண்டேயா (1957)

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

வரிகள் – மருதகாசி

குரல் – கே.ஜமுனா ராணி & செல்லமுத்து

 

      

       விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் பொற்காலத் திரையிசையில் ஐம்பதுகளில் மக்கள் மகுடி கேட்ட நாகம் சொக்கிக் கிடந்தார்கள். அதை நிரூபிக்கும் வண்ணம் இன்றைய தேர்வுப் பாடல் அமைந்திருக்கிறது.

 

       இரட்டையரின் வளர்ச்சிப் பாதையில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தவர் திரு பி.எஸ்.ரங்கா. அவரின் விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பெரும்பாலும் மெல்லிசை மன்னர்களே இசையமைத்தார்கள். தெனாலி ராமன், பக்த மார்க்கண்டேயா, நிச்சய தாம்பூலம், தென்றல் வீசும் உள்ளிட்ட படங்கள் வரலாற்றில் மறக்கவொண்ணா திரைக்காவியங்களாய் வாழ்கின்றன என்றால் அதில் மெல்லிசை மன்னர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

 

       அந்த வகையில் ரங்கா அவர்களின் முக்கியமான படமாக விளங்குவது பக்த மார்க்கண்டேயா. மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த முதல் முழுநீள புராணப்படமாக கருதப்படுகிறது. மார்க்கண்டேயனின் கதை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் முழுப்படத்தின் காணொளி கிடைக்காத காரணத்தால் அல்லது நான் பார்க்காத காரணத்தால் இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்ற சூழ்நிலையை விளக்க இயலவில்லை. திரு வேம்பார் மணிவண்ணன் என்பவர் இப்பாடலை காணொளியோடு யூட்யூபில் தரவேற்றியுள்ளார்.  அவருக்கு நன்றி. அது ஒரிஜினில் தமிழா அல்லது வேற்று மொழி காணொளியா என்பது தெரியவில்லை. எது எப்படிஇருந்தாலும் காணொளிக்கு அவருக்கு நன்றி.

 

       பாடலை தயார் செய்வதற்காக கேட்டபோது, இது ஒரு தெருப்பாடலாக இருக்கும், மகுடி ஒலிப்பதால் நாகத்தை வைத்து வித்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. அவர் அளித்துள்ள காணொளியைப் பார்த்த பொழுது அது தெருப்பாடல் என்று தெரிகிறது. காணொளியில் நாகத்தைக் காண முடியவில்லை.

 

       காணொளியைப் பற்றி அதிகம் நாம் Bother பண்ணாமல் பாடலை ரசிப்போம். செல்லமுத்து என்ற பாடகர் இப்பாடலைப் பாடியிருக்கிறார். அவருடைய குரல் வளத்தைக் கேட்கும் போது ஏன் அவர் மன்னர் இசையில் அதிகம் பாடவில்லை என்ற எண்ணம் மேலோங்குகிறது. பாரம்பரியமான கிராமிய இசை மெட்டில் புன்னாக வராளி ராகத்தில் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. ராக நிபுணர்கள் விளக்க வேண்டுகிறேன். ஜமுனா ராணியின் குரல் அப்படியே மகுடியோடு இழைந்து ஓடுகிறது. அதே போல் பாடல் வரிக்கு இடையே குரல் வித்தையும் செய்கிறார். அது பாடகரே செய்வதா அல்லது வேறு யாராவது செய்திருக்கிறாரா தெரியவில்லை. 

 

       முதல் முறை இப்பாடலைக் கேட்பவர்கள் நிச்சயம் மீண்டும் 2 அல்லது 3 முறையாவது ஒலிக்கச் செய்து கேட்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

 

       பாடல் வரிகள் சிறப்பாக அமைந்துள்ளன. மருதகாசி அவர்களின் மொழிப்புலமைக்கு இன்னுமோர் சான்று இப்பாடல்.

 

       மீண்டும் இன்னொரு சிறப்பான பாடலுடன் சந்திப்போம்.

 

  https://www.youtube.com/watch?v=ifhKfeSm-_o


Quote
Share: