Notifications
Clear all

1956 - Paasavalai - Mathippu Ketta Mama  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 112
11/10/2019 4:51 pm  

பாடல் : மதிப்பு கெட்ட மாமா

பாடல் : மதிப்பு கெட்ட மாமா

பாடியவர்கள் : கே.ராணி, குழுவினர்

படம் : பாசவலை

பாடலாசிரியர் : ஏ.மருதகாசி? / பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்?

இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

வருடம் :  1956

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று costume drama எனப்படும் ராஜா-ராணி பாணி படத்திலிருந்து வேடிக்கையான ஒரு பாடலை தான் நாம் அலச போகிறோம் - "பாசவலை" படத்திலிருந்து "மதிப்பு கெட்ட மாமா" என்ற பாடல்.

பாடல் இடம்பெறும் வரையிலான படத்தின் கதை - தம்பி வி.கோபாலகிருஷ்ணனின் கெட்ட நடவடிக்கையினால் மக்களின் நம்பிக்கையை இழந்து  ராஜாவான எம்.கே.ராதாவும், ராணியான ஜி.வரலட்சுமியும் இரு குழந்தைகளும் பதவியை துறந்து நாட்டை விட்டே வெளியேறுகிறார்கள். விதி அங்கும் விளையாடுகிறது.  நால்வரும் திசைக்கு ஒன்றாக பிரிய நேர்கிறது.  எம்.கே.ராதா விஷம் கலர்ந்த ஒரு குளத்து தண்ணீரை குடிக்க நேரிட அவரது மனநிலை பாதிக்கப்படுகிறது.  அவருக்கு ஆடுமேய்ப்பவரான வி.கே.ராமசாமி அடைக்கலம் கொடுக்கிறார். வி.கோபாலகிருஷ்ணன் தன் தவறை உணர்ந்து அண்ணனையும் குடும்பத்தையும் தேடி அலைகிறார்.  மனநிலை குன்றிய அண்ணனை கண்டு மனம் வருந்துகிறார். அவர் எப்படி இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்று வி.கே.ராமசாமியிடம் இருந்து அறிந்த அவர் அதை குணப்படுத்த மருந்தேதும் இல்லையா என்று கேட்க்கிறார்.  வி.கே.ராமசாமி அதற்க்கு மூலிகை இருப்பதாகவும், ஆனால் அது கொடும் ஆபத்து நிறைந்து கொல்லிமலையில் தான் உள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை என்றும் கூறுகிறார். எப்படியாவது தான் அதை கொண்டுவருவதாகவும், அதுவரை அண்ணனை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் சொல்லி அவர் கொல்லிமலைக்கு புறப்படுகிறார்.  கொல்லிமலையை ஆட்சி செய்ப்பவள் கன்னிப்பெண்ணான ஒரு ராணி.  அவள் ஒரு மாயாஜாலக்காரியும் கூட.      வி.கோபாலகிருஷ்ணன் அங்கு செல்லும் போது அவளும் தோழிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பதை ஒளிந்திருந்து பார்க்க நேரிடுகிறது. இதை கவனித்த அவர்கள் அவனிடம் சரமாரியாக கேள்விகள் கேட்க, அதற்க்கு சரிவர பதில் கூறமுடியாமல் அவர் தவிக்க, இவர் மூலிகை திருட வந்தவர்தான் என்று அவர்கள் முடிவுகட்ட, அவள் அவனை தனது மந்திரசக்தியால் நாயாக உருமாற்றுகிறாள்.  நாயாக மாறிய அவனை நடுவில் உட்க்கார வைத்து அவர்கள் வட்டமாக நின்று கேலிசெய்து ஆடிப்பாடுவது தான் இந்த பாடல்.

பாடலின் மைய்யக்கரு நக்கல், கேலி, கும்மாளம்.  வழக்கமாக இது போன்ற கேலிப்பாடல்களுக்கு இசை சற்று தூக்கலாகவே இருக்கும், பல இசைக்கருவிகளை போட்டு அமர்க்களப்படுத்திவிடுவார்கள்.    ஆனால் அதிலிருந்து மிகவும் மாறுபட்டு ஆர்பாட்டம் சற்றும் இல்லாமல் அமைதியாகவே மெட்டமைக்கப்பட்டுள்ளது.  ஆராய்ந்து பார்க்கையில் இது பஞ்சாபில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பாடப்படும் பாணியை ஒட்டியிருப்பது புரிந்தது.  ஆம், பஞ்சாப் கிராமீய இசையில் "Tappe" எனப்படும் ஒரு பாணியில் அமைந்தது தான் இந்த பாட்டு.  ஏறத்தாழ அந்த பாணியோடு தங்களது மெல்லிசை பாணியையும் புகுத்தி இசை அமைத்துள்ளார்கள்.

Tappe என்பது : இது புஞ்சாபிகளின் திருமணத்திற்கு ஓரிரு நாள் முன்பு பாடப்படும் ஒரு பாணி - அதை  "Giddha" என்றும் சொல்லுவார்கள்.  அதாவது இது பெரும்பாலும் பெண் வீட்டில் நிகழும் ஒரு நிகழ்ச்சியில் பாடப்படும் பாணி.  திருமணத்திற்கு ஓரிரு நாள் முன்பு பெண் வீட்டில் நடக்கும் ஒரு ritual "Sangeet" மற்றும் "Mehndi".  சில வீட்டில் இது தனி தனி நாளில் நடத்தப்படும்.  சில வீட்டில் இரண்டையும் ஒரே நாளில் நடத்துவார்கள்.  இரண்டுமே பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.  ஆண்களுக்கு அனுமதி கிடையாது.  "Mehndi" என்பது நமது திருமணங்களில் நடப்பது போல தான்.  பெண்ணின் அத்தை, மாமி, மற்றும் சில உறவினர்கள் கூடி அவளுக்கு மருதாணி இட்டுவிடும் நிகழ்ச்சி தான் அது.  "Sangeet" என்பது திருமணமாகப்போகும் பெண்ணை ஒரு பக்கம் உட்க்கார வைத்து பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஆடிப்பாடி கும்மாளம் அடிக்கும் நிகழ்ச்சி.  இதில் வாத்தியமாக ஒரே ஒரு டோலக் மட்டுமே பயன்படுத்துவார்கள்.  அதை வாசிப்பவரும் ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்.  பெரும்பாலும் இது ஒரே சீராக, ஒரே தாளத்தில் தான் இருக்கும், சில சமயம் ஓர் சில "cuts" இருக்கும் அவ்வளவே.  ஒரு பெண் டோலக் வாசிக்க, இன்னொரு பெண் ஒரு "ஸ்பூன்"னை வைத்து அந்த டோலக் மீது தாளம் தவறாமல் தட்டிக்கொண்டிடிருப்பாள்.  இந்த நிகழ்ச்சியின் main theme ஆண்களை கலாய்ப்பது.  ஆண்மகனை எப்படியெல்லாம் துன்புறுத்தலாம், அவனை எப்படியெல்லாம் கலாய்க்கலாம், அவனை தன் கைப்பொருளாக்கி  எப்படியெல்லாம் வேலை வாங்கலாம் என்பதை கேலியும், கும்மாளமுமாக பாடுவார்கள், ஆடுவார்கள்.  இந்நிகழ்ச்சி இரவு 9 மணிவாக்கில் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை வரை நீடிக்கும்.  பெருபாலும் இது வீட்டிலேயே நடக்கும் நிகழ்ச்சி.  பெரிய வசதி படைத்தவர்கள் ஹால் புக் செய்தும் நடத்துவார்கள். 

அது சரி, இந்த பாட்டுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ப்பீர்கள்.  நேரடியாக ஒரு சம்பந்தமும் இல்லை தான்.  ஆனால் பாடலின் மைய்யக்கரு சில பெண்கள் சேர்ந்து ஒரு ஆண்மகனை (நாயாக உருமாற்றி தான்) கலாய்ப்பது என்று தயாரிப்பாளர் / இயக்குனர் சொன்னதும் மன்னருக்கு இந்நிகழ்ச்சி ஞாபகம் வந்திருக்கலாம்.  வழக்கத்துக்கு மாறாக, சற்று வித்தியாசமான அணுகுமுறையாயிருக்குமே என்று நினைத்து அந்த பாணியை தழுவி மெட்டமைத்திருக்கலாம்.

இப்போது பாடலை பார்ப்போம் :- முன்னமே கூறியது போல் சற்றும் ஆர்ப்பாட்டமில்லாத இசை. கேலியும், கும்மாளவும் பாடும் குரல்களில் தான்.  பாடல் ஆரம்பிப்பது "ஹா ஹா ஹா, ஹோ ஹோ ஹோ" என்ற ஹம்மிங்கோடு - இது ஏறத்தாழ பஞ்சாபி பாணியில் "ஹாய் ஷாவா, ஹாய் ஷாவா" என்பது போல் வடிவமைத்துள்ளார். இந்த ஹம்மிங்கிற்கு contrast ஆக "மாண்டலின்"னில் புல் புல் தாரா பாணியில் ஓர் piece வாசிக்க செய்துள்ளார்.  மிகவும் உன்னிப்பாக கவனித்தால் தான் இதை புரிந்துகொள்ள முடியும். அதை தழுவி Double Shehnai (அந்த கருவி என்று தான் நினைக்கிறேன்) ஒலிக்கிறது.  அத்தோடு சேர்ந்து பியானோவில் chord அல்லது கிட்டார் chord ஒலிக்க செய்துள்ளார் (most probably it should be Guitar Chords).  தாளத்துக்கு Dholak.  கூடவே சன்னமாக "கிளாப்ஸ்" அல்லது கிளாப்ஸ் போன்று ஒலிக்க செய்த அகோகோ.  தொடர்ந்து பல்லவியின் முதல் இரண்டு வரிகள் பாடப்பட்டு – in the voice of lead singer K.Rani - அதையடுத்து கோரஸ் "தோ தோ தோ தோ" என்று பாடுகிறார்கள் – this is equal to their “Oh Balle Balle Balle…..” (அதாவது பஞ்சாபிக்காரர்களின்). பிறகு பல்லவியின் நான்கு வரிகள் கே.ராணி பாட, அதன் கடைசி இரண்டு வரிகளை கோரஸ் repeat செய்கிறது.  அதை தொடர்ந்து Dholak -கில் ஒரு interlude - இதுவும் Tappe பாணியில் இருப்பது போல் தான்.  தொடர்ந்து பல்லவியின் முதல் இரண்டு வரிகள் கோரஸ் பாடி பல்லவி முடிகிறது. 

தொடர்வது first bgm - வயலினோடு சேர்ந்து புல்லாங்குழலில் ascending and descending  notes பாணியில் - அதாவது ச,ரி,க,ம,ப,த,நி,ச - ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற க்ரம வரிசையில் - ஒலிக்கிறது.  அதை தழுவி முதல் சரணம் - சரணத்தின் முதல் நான்கு வரிகளை lead singer பாட, அதன் கடைசி இரண்டு வரிகளை கோரஸ் repeat செய்கிறது.  தொடர்ந்து சரணத்தின் கடைசி இரண்டு வரிகளை lead singer பாட அதன் இரண்டாவது வரியை கோரஸ் repeat செய்து, இடைவெளி விடாமல் சட்டென்று அனுபல்லவியான "நடிப்பு காட்டி ...." என்ற வரியை பாடி தொடர்ந்து பல்லவியின் முதல் இரண்டு வரிகளை பாடி முதல் சரணம் முடிகிறது - இதுவும் "Tappe " பாணி தான்.  சரணத்தில் தாளத்தில் புதுமை செய்துள்ளார்.  இங்கு டோலக்கை தவிர்த்து தபலாவை பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் சரணம் முடிந்து அனுபல்லவியின் வரியான "நடிப்பு காட்டி ஏமாந்த மாமா" என்ற வரி வரும்போது தபலாவை ஒதுக்கி  மீண்டும் டோலக்க்கை புகுத்தியுள்ளார் – with a roll on Dholak.  சரணத்தின் சில பகுதிகளில் சன்னமான முறையில் “மாண்டலின்” interlude சேர்க்கப்பட்டுள்ளது - இதுவும் மிகவும் உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடுயும்.  இது போன்ற சிறு சிறு ஜாலங்கள் தான் MSV இசையின் speciality -யே.  பாடலுக்கு அழகு / மெருகூட்டுவதும் இது போன்ற ஜாலங்களே.

தொடர்வது இரண்டாவது BGM - இதுவும் முதல் BGM போலவே சிறியதுதான்.  இவையெல்லாம் "Tappe" பாணியை பின்பற்றியது தான்.  இந்த BGM சற்று மாறுபட்டுள்ளது - இந்த BGM மாண்டலினில் வாசிக்கப்பட்டுள்ளது - தாளத்துக்கு டோலக்.  Then follows the second Charanam.  Here the singing style slightly differs from the first charanam, so does the chorus repeating the lines.  Here too few lines have been fused with subtle interludes in Mandolin and the charanam ends in the same fashion like first charanam. 

Then follows the third BGM – This BGM too is short and different from the other two BGMs.  It’s played in Violin and a “barking sound like” is infused by a local instrument.  Then the following third charanam follows.  This charanam too is differently sung and structured.  The lead singer sings the first two lines and this time chorus reciprocates singing a different line – aka third line of the charanam.  Then the lead singer croons the next two lines with a different modulation, especially the last line, which is echoed in chorus too.  Then the lead singer sings the Anupallavi line “நடிப்பு காட்டி ஏமாந்த மாமா……..", which is fused with an interlude in Dholak, following that the chorus repeats those lines and sings the first two lines of Pallavi. This is followed by "தோ தோ தோ தோ" by the chorus and is followed by music in Double Shehnai alongwith claps and the song ends by repeating the first two lines of the Pallavi in Chorus followed by "தோ தோ தோ தோ" and again singing the first two lines of the Pallavi.

இது போல் மூன்று BGMs அமைந்த பாடல்களுக்கு பிற்க்காலத்தில், குறிப்பாக அவர் தனியாக பிரிந்து இசை அமைக்க ஆரம்பித்த பிறகு, ஒன்று முதல் மற்றும் மூன்றாவது ஒரே பாணியிலும், இரண்டாவது BGM சற்று மாறுபட்டும் அமைத்திருப்பார்.  சில சமயம் முதலாவதும், இரண்டாவது ஒருபோலவும், மூன்றாவது சற்று மாறுபட்டும் இருக்கும்.  ஆனால் அவர் ஜோடி சேர்ந்து இமைத்த போது, ஆரம்ப காலத்தில் மூன்று BGM -மும் மூன்று விதமாக அமைத்திருந்தார்.  இந்த பாடலிலும் அதை நாம் காணலாம்.

Though adapted from the Punjabi Tappe, the tune is differently structured and executed brilliantly bearing the Mannar brand of melody.  We can call it as “MSV brand Tappe”!

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே. டி.

 

https://youtu.be/qsSI4lsi_jU

 


Quote
Share: