1956 - பாச வலை - லொ...
 
Notifications
Clear all

1956 - பாச வலை - லொள் லொள் லொள்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
26/01/2020 11:31 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

  1. 23.01.2020

பாடல் – மச்சான் உன்னைப் பாத்து

படம் – பாசவலை (1956)

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

வரிகள் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

குரல் – ஜிக்கி

 

 

       முந்தைய பதிவில் பாசவலை படத்திலிருந்து சின்னப் பொண்ணு சிங்காரி பாடல் இடம் பெற்றது. அதற்கான இணைப்புரையில் ஜிக்கி பாடிய பாடலைப் பற்றக்  குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த பாடலை நமது சகோதரி உமா அவர்கள் விரும்பிக் கேட்டிருந்தார். அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்று அந்த பாடல் இடம் பெறுகிறது.

 

       தன் ஆசைக்கு இணங்காத சின்ன மகராஜாவை மந்திரத்தால் நாயாக உருமாற்றிய இளம்பெண் தன் முயற்சியை கைவிடவில்லை.  நீ என் ஆசைக்கு இணங்கினால் உன்னை பழைய நிலைமைக்கு மாற்றுகிறேன் என்று சொல்லி மீண்டும் அவனை வசீகரித்துப் பாடுகிறாள்.  அவன் நாயாக இருப்பதால் லொள் லொள் என்று அழைத்துப் பாடுகிறாள். இந்தப் பாடல் தான் இன்று இடம் பெறுகிறது.

 

       முன்பே கூறியது போல் பட்டுக்கோட்டையார் தூய தமிழில் பாடல் எழுதியதை மாற்றச் சொல்லி சுந்தரம் கூறியதும் அதற்கேற்ப மன்னர் அதை மாற்றி அமைத்ததையும் பற்றிக் கூறப்பட்டிருந்தது.  அந்தப் பாடல் பதிவைப் பற்றி மன்னரே சொல்லக் கேட்டால் எப்படியிருக்கும். இதோ மன்னரே இந்தப் பாடலைப் பற்றிச் சொல்வதைக் கேளுங்கள்.

 

       பாடலின் முடிவில் ஜிக்கி அப்படியே சொக்கிப் போய் மயக்கமுற்று கிறக்கத்தில் பாடுவதைப் போல் மன்னர் அமைத்திருக்கிறார். அதை அருமையாக செயல்படுத்தியிருக்கிறார் ராஜாமணி.

 

       இன்னும் என்ன ... பாடலைக் கேளுங்கள். மயங்கித் திளையுங்கள்.

 

       மன்னர் உரைக்கு நன்றி சரிகமா மற்றும் யூட்யூப் இணையதளம்.

 

       மீண்டும் இன்னொரு அருமையான பாடலுடன் சந்திப்போம்.

 

https://www.youtube.com/watch?v=ggv_b-iIuM0


Quote
Share: