1955 - நீதிபதி - வந...
 
Notifications
Clear all

1955 - நீதிபதி - வந்ததடி ராஜயோகம்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
26/01/2020 11:34 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

  1. 25.01.2020

 பாடல் – வந்ததடி ராஜயோகம்

படம் – நீதிபதி (1955)

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

வரிகள் – மருதகாசி

குரல் – கே.ஜமுனா ராணி & கோரஸ்

 

      

       அசரவைக்கும் ஐம்பதுகளின் பாடல்கள் பகுதியில் இன்று 1955ம் ஆண்டில் மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் வெளியான நீதிபதி படத்திலிருந்து மருதகாசியின் வரிகளை கே.ஜமுனா ராணி மற்றும் குழுவின் பாடிய வந்ததடி ராஜயோகம் என்ற பாடல் இடம் பெறுகிறது.

 

       இந்தப் படத்தினை இன்னும் முழுமையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையாதலால் படத்தின் காணொளிக்கான இணைப்பும் நண்பர்களுக்கு தரப்படுகிறது.  பிறிதொரு சந்தர்ப்பத்தில் இப்படத்திலிருந்து வேறோர் பாடல் இடம் பெறும் போது கதையைப் பற்றி எழுத முயல்கிறேன்.

 

       பாடல் காட்சியின் காணொளியிலிருந்து இது தங்களுடைய வலையில் ஒரு பணக்கார வாலிபன் சிக்கி விட்டான் என்பதை பாடலின் நாயகி கொண்டாடுவது போல தோன்றுகிறது. வரிகளும் அவ்வாறே காட்சி தருகின்றன. அருமையான பாடல். ஜமுனா ராணியின் சொக்க வைக்கும் குரலில் மன்னரின் இசை ஜாலத்தில் பாடல் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும் பாடல். இது வரை இப்பாடலைக் கேட்டிராதவர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல மெலோடியாக இருக்கும்.

 

       நீதிபதி திரைப்படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ. சாமி. கே.ஆர்.ராமசாமி, ஜெமினி கணேசன், ராஜ சுலோச்சனா, டி.எஸ்.பாலையா, எம்.என்.ராஜம், எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.பாலசுப்ரமணியம், சி.எஸ்.பாண்டியன், எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, எம்.கே.முஸ்தஃபா, கே.மாலதி, எல்.விஜயலக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர். என்.எஸ்.திரவியம் தயாரித்த இப்படம் எம்.எஸ்.சோலைமலை அவர்கள் எவுதிய கதையை அடிப்படையாக கொண்டது. வசனத்தயும் அவரே ஏ.கே.வேலனுடன் இணைந்து எழுதியிருந்தார். ஒளிப்பதிவு ஆர்.ஆர்.சந்திரன், ராஜ்பகதூர் மற்றும் பி.ராமசாமி கவனித்தனர். பி.வி.நாராயணன் படத்தொகுப்பு. பிரபல பரத நாட்டிய மேதை வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள் நடனத்தை அமைத்திருந்தார்.

 

       இன்னொரு சிறப்பான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.

 

https://www.youtube.com/watch?v=wmoojPNNxq0

நீதிபதி முழுப்படத்திற்கான காணொளி:

 

https://www.youtube.com/watch?v=BCaf9edREKQ

This topic was modified 10 months ago by veeyaar

Quote
Share: