1955 - குலேபகாவலி -...
 
Notifications

1955 - குலேபகாவலி - வில்லேந்தும் வீரரெல்லாம்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:37 am  

141. 01.02.2020

பாடல் – வில்லேந்தும் வீர்ரெல்லாம்
படம் – குலே பகாவலி (1955)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள் – தஞ்சை ராமய்யா தாஸ்
குரல்கள் – திருச்சி லோகநாதன், பி. லீலா, ஜி.கே. வெங்கடேஷ்

தெரிந்த படம், தெரிந்த பிரபலமான பாடல். இந்தப் படத்தைப் பற்றியோ காட்சிகளைப் பற்றியோ புதியதாக சொல்லவேண்டிய தேவையிருக்காது. அனேகமாக அனைவருமே அறிந்திருப்பர். பகாவலி நாட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட மலருக்கு கண் பார்வையை மீண்டும் தரக்கூடிய சக்தி உண்டு என கேள்விப்படும் இளவரசன் தாசன், அதற்காக பயணப்படும் போது சந்திக்கும் பல்வேறு அனுபவங்களே படத்தின் கதை. ஆயிரத்தோரு அரபு இரவுகள் என்ற பழங்கால கதைகளில் ஒன்றின் அடிப்படையாய் வைத்து உருவாக்கப்பட்ட படம். திரைக்கதை வசனம் பாடல்கள் தஞ்சை ராமய்யா தாஸ். அமரர் எம்.ஜி.ஆர்., ஜி.வரலட்சுமி, டி.ஆர். ராஜகுமாரி, ராஜசுலோச்சனா,, சந்திரபாபு, தங்கவேலு, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஈ.வி.சரோஜா, இன்னும் பலர் நடித்திருந்தனர். கூண்டுக்கிளி படத்திற்காக பதிவு செய்யப்பட்ட மயக்கும் மாலைப் பொழுதே பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. டி.கே.ராஜாபாதர் ஒளிப்பதிவு, எம்.எஸ்.மணி-தங்கராஜ் படத்தொகுப்பு, என பல நிபுணர்களின் பங்களிப்பில் டி.ஆர். ராமண்ணா ஆர்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருந்தார்.

தாஸன் சந்திக்கும் அனுபவங்களில் ஒன்று ஒரு ராணி பகடை விளையாட்டின் மூலம் பல மன்னர்களை சவாலுக்கழைத்து தந்திரமாக வீழ்த்தி அவர்களை அடிமைப்படுத்துவது. அந்த பகடை விளையாட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக ஐயப்படும் தாஸன் அதை எதிர்பார்த்து தானும் தந்திரமாக விளையாடி அவளை ஜெயிக்கிறான். இந்த விளையாட்டின் போது பாடப்படும் பாடல் தான் இன்றைய தேர்வாக இங்கே இடம் பெறுகிறது.

படத்தில் வெவ்வேறு கட்டங்களில் ஒலிக்கும் இப்பாடல், நமக்காக ஒன்றாய் தொகுக்கப்பட்டு இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இன்னும் ஓரிரு பாடல்களுடன் ஐம்பதுகளின் வரிசை முடிவடைந்து பொற்காலத்தின் அடுத்த தசாப்தமான அறுபதுகளில் வெளியான பாடல்கள் வலம் வர உள்ளன.

மீண்டும் இன்னொரு அற்புதமான பாடலுடன் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:37 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது


ReplyQuote
Share: