Notifications

1954 Movies  

  RSS

MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 52
29/04/2019 3:56 am  

Films released in the year 1954

 

1. Pona Machan Thirumbi Vandhan

2. Sorga Vasal

3. Sugam Enge

4. Vaira Malai


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
26/01/2020 11:22 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

 

பாடல் – ஆதாரம் நின் பாதம் அம்பிகையே

படம் – போன மச்சான் திரும்பி வந்தான் (1954)

இசை- சி.என். பாண்டுரங்கன் - எம்.எஸ். விஸ்வநாதன்

வரிகள் –வி.சீதாராமன்

குரல் – ராதா ஜெயலக்ஷ்மி

 

 

       பல்வேறு பகுதிகளில் இது வரை மன்னர் இசையில் வெளியான பாடல்கள் இடம் பெற்றன. இனி வரும் சில நாட்களுக்கு மன்னர் இசையில் அதிகம் அறிந்திடாத, அல்லது அதிகம் கேட்டிராத பாடல்கள் இடம் பெற உள்ளன. வெவ்வேறு தசாப்தங்கள் வரிசைக்கிரமமாக வர உள்ளன.

 

       பகுதியைத் துவக்கி வைக்க வருவது 50 களில் வெளியான திரைப்படப் பாடல்கள். 1950கள் என்றாலே மனம் துள்ளக்கூடும். என்றாலும் இதிலும் பல முத்துக்கள் மூழ்கி எடுக்க வேண்டி உள்ளன. அந்த அடிப்படையிலேயே பாடல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 50களில் வெளியான படப்பால்கள் Fascinating Fifties என்ற தொகுப்பில் தொடர உள்ளன. அதே போல் வெவ்வேறு தசாப்தங்களுக்கு வெவ்வேறு பகுதித் தலைப்பு மாறும்.

 

       துவக்கி வைக்கும் விதமாக வருவது திருமதி ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிய ஆதாரம் உன் பாதம் என்ற பாடல். போன மச்சான் திரும்பி வந்தான் என்ற படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு சி.என். பாண்டுரங்கள் இசையமைத்திருக்கிறார். என்றாலும் சில பாடல்களுக்கும் மற்றும் சில காட்சிகளின் பின்னணி இசைக்கும் மன்னர் பணியாற்றியிருக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்களின் விவரங்கள்

 

ஏனோ நானும் வாடுறேன் என்ற பாடலை எவுதியவர் திரு என்.எஸ்.சிதம்பரம். மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் திரு வி. சீதாராமன்

 

திரு சி.என். பாண்டுரங்கள் இசையில் உருவான பாடல்கள்

 

  1. இதயம் என்னும் – ஏ.எம்.ராஜா மற்றும் யூ.ஆர். ஜீவரத்னம்
  2. ஓடம் போலே – வி.என்.சுந்தரம், ஏ.எல்.ராகவன், சத்தியவதி, சுப்புலக்ஷ்மி
  3. ஏனோ நானும் வாடுறேன் -ஜிக்கி

 

மெல்லிசை மன்னர் இசையில் உருவான பாடல்கள்

 

  1. ஆதாரம் நின் பாதம் – ராதா ஜெயலக்ஷ்மி
  2. பெண்ணே வீட்டில் – பி.யலீலா, ஏ.ஜி. ரத்னமாலா
  3. கொடுத்திடு நீயே கொடுத்திடு – ஏ.ஜி.ரத்னமாலா, கே.ஆர். செல்லமுத்து
  4. யாரை ஏமாற்ற வந்தீர் – யூ.ஆர்.ஜீவரத்னம்

 

சாம்பு (கே.ஏ.தங்கவேலு), பணக்கார இளைஞன். பணத்திற்கு கவலையில்லாத காரணத்தால் சாப்பிடுவது தூங்குவது, வெற்றிலை போடுவது என பொழுதைக் கழிக்கிறான். தன் வேலையாளிடம் (கிட்டான்) பழைய கதைகளை அள்ளி விடுவதை பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறான். சாம்பு தன் சகோதரி சந்திராமேல் (குசலகுமாரி) மிகுந்த பாசம் வைத்துள்ளான். அவளைக் கல்யாணம் செய்து கொடுத்து, மாப்பிள்ளையைத் தன்னோடு வீட்டிலேயே வைத்துக் கொள்ளவேண்டும் என விரும்புகிறான்.

 

   இதற்காக அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதன்படி பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் தருகிறான். தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள வரன் தேவை என்றும் அந்த வரனை ஆலோசனை செய்ய ரூ 1000/- கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கிறான்.

 

   இந்த விளம்பரம் வட இந்தியாவில் வாழும் இளைஞன் தியாகு (ஸ்ரீராம்) கண்ணில் படுகிறது. வட இந்தியாவில் சப்பாத்தியையே தின்று வாழ்க்கையை வெறுத்து விட்ட தியாகுவிற்கு இது நல்ல சான்ஸாக படுகிறது. சம்மதப்பட்டு விண்ணபிக்கிறார். இதே போல் இன்னொருவரும் விண்ணப்பிக்கிறார்.

 

   ஆனால் இது போல் விளம்பரம் செய்து வரன் தேடுவது சந்திராவிற்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள்.  வழியில் தியாகுவை சந்திக்கிறாள். இருவருக்கும் ஒருவருக்கொருவர் யார் என தெரியவில்லை. அதாவது, அவள் தான், தான் விண்ணப்பம் செய்த பெண் என தியாகுவிற்கும் அவன் தான் விண்ணப்பம் செய்தவன் என்று சந்திராவிற்கும் தெரியாது.  ஆனால் இருவரின் மனமும் ஒத்துப் போய் காதல் வயப்படுகிறார்கள்.

 

   ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் ஒரு கார் விபத்தில் அடிபடுகிறார்கள்.  அந்தக் காரின் சொந்தக்காரர் பெரிய பணக்காரர். இருவரையும் தம்பதி என நினைத்து, அவர்கள் மேல் பரிதாபப்பட்டு மேல் சிகிச்சைக்காக தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.  தங்கள் மேல் பழி வரக்கூடும் என அஞ்சி தியாகும் சந்திராவும் பெயரை மாற்றிச் சொல்கின்றனர். இதனால் பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள்.

 

   சந்திரா தியாகு திருமணம் செய்து கொண்டார்களா, சந்திராவின் சகோதரன் சாம்பு தன் தங்கையை கண்டு பிடித்தானா என்பது போன்ற கேள்விகளுக்கு திரைப்படம் விடை கூறும்.

 

   ஸ்ரீராம் படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, கே.ஏ.தங்கவேலு, குசலகுமாரி, சங்கரமூர்த்தி, கிட்டான், கணபதி பட், ஃப்ரெண்ட் ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், வேலப்பன், லக்ஷ்மிகாந்தா, அங்கமுத்து, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரபல ஒளிப்பதிவு மேதை ஜித்தன் பானர்ஜி மற்றும் வி. குமார தேவன் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

 

   துமிலன் எழுதிய புனர் ஜென்மம் என்ற கதையைத் தழுவிய இப்படத்தின் வசனம் வி. சீதாராமன் எழுதியுள்ளார். படத்தொகுப்பு பி.எம். ராமமூர்த்தி. டி.வெங்கடசாமி தயாரிப்பை கவனிக்க, சி. ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் இப்படம் உருவானது. இதைத் தொடர்ந்து மெர்குரி ஃபிலிம்ஸ் பேனரில் நடிகர் திலகம் நடித்த வாழ்விலே ஒரு நாள் உள்ளிட்ட சில படங்களை ஸ்ரீராம் தயாரித்துள்ளார்.

 

   இன்றைய பாடல் படத்தின் டைட்டில் முடிந்தவுடனே கடவுளைப் போற்றிப் பாடும் பாடலாக இடம் பெற்றுள்ளது.

 

   இன்னும் தொடர்ந்து இப்பகுதியில் அபூர்வ முத்துக்களைத் தோண்டி எடுக்க உள்ளன.

 

   இன்னொரு சிறப்பான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.

 

 

https://www.youtube.com/watch?v=aqo61jCFU64

  

 
This post was modified 2 months ago by veeyaar

ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
26/01/2020 11:26 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

130. 20.01.2020

 

பாடல் – கண்ணைக் கவரும் அழகு வலை

படம் – சுகம் எங்கே (1954)

இசை- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி

வரிகள் – அ. மருதகாசி

குரல் – கே.ஆர்.ராமசாமி, ஏ.பி.கோமளா

 

       Fantastic Fifties பகுதியில் இன்று இடம் பெறுவது 1954ம் ஆண்டில் வெளியான சுகம் எங்கே திரைப்படத்திலிருந்து கண்ணைக் கவரும் அழகுவலை என்ற பாடல். மருதகாசி அவர்கள் இயற்றிய இப்பாடலை கே.ஆர்.ராமசாமியும் ஏ.பி. கோமளாவும் பாடியுள்ளனர்.

 

       சுகம் எங்கே சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் படம். W.R. சுப்பா ராவ் ஒளிப்பதிவு, எல். பாலு படத்தொகுப்பு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு, ஏ.கே.வேலன்-கண்ணதாசன் கதை வசனம், கே.ராம்நாத் இயக்கம், என பல மேதைகளின் உழைப்பில் உருவான திரைப்படம்.

 

       ஏழைக்குடும்பத்தில் பிறந்த வேலனுக்கும் (K.R. ராசமாசமி) மிராஸ்தார் வீட்டு கணக்கப்பிள்ளையின் மகளான வேணிக்கும் (K. சாவித்திரி) காதல் உருவாகிறது. ஆனால் வேணியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிறான் பாண்டித்துரை (T.K. ராமச்சந்திரன்).  பாண்டித்துரையின் சகோதரர் அந்த ஊர் ஜட்ஜ் (K.நடராஜன்).  அவர் வீட்டில் வேலையாளாக பணியாற்றியவன் தான் வேலன்.

 

       ஒரு கட்டத்தில் தன் ஏழ்மையால் வேணியை காப்பாற்ற முடியாது என தீர்மானித்து அவளை மறக்க தீர்மானிக்கிறான் வேலன். அதன் படி நாகப்பனுடைய (P.S. வீரப்பா) எஸ்டேட்டில் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்கிறான். அந்த ஒப்பந்தத்தின் படி மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும். நடுவில் விலக முடியாது. அப்படி விலக வேண்டுமென்றால் நூறு ரூபாய் அபராதம் கட்ட் வேண்டும். அதை வேணியிடம் சொல்கிறான் வேலன். வேணியும், இதற்காக கவலைப்பட வேண்டாம், தன் தோழி மரகதம் (T.P. முத்துலக்ஷ்மி) மூலமாக மறுநாள் காலையில் பணம் கொடுத்தனுப்புவதாகவும் அதை நாகப்பனிடம் கொடுத்து விட்டு வேலையை விட்டு வந்து விடும்படியும் சொல்கிறாள்.  வேலனும் சம்மதிக்கிறான். தான் இல்லா விட்டாலும் அவன் வசிக்கும் இடத்தில் உள்ள போஸ்டாஃபீஸில் போஸ்ட் மாஸ்டர் பூபதியிடம் (S.V. சுப்பய்யா )அந்த பணத்தை கொடுத்து விட்டால், அவர் அதை தன்னிடம் சேர்த்து விடுவார், அவர் தனக்கு மிகவும் நம்பிக்கையானவர் என வேணியிடம் வேலன்  சொல்கிறான்.

 

       ஆனால் பூபதியோ நாகப்பனின் கையாளாக இருப்பவர். நாகப்பனிடம் வேலன் வந்து மறுநாள் காலையில் பணத்தை கொடுத்து விட்டு வேலையில் இருந்து விலகிக்கொள்வதாக கூறுகிறான். அந்த சமயத்தில் பூபதியுடம் உடன் இருக்கிறார். ஆனால் பூபதி நாகப்பனின் ஆள் என்பது வேலனுக்கு தெரியாது. இது நாகப்பனுக்கு அதிர்ச்சியளிக்கிறது. காரணம், வேலனை மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் எஸ்டேட்டிலேயே இருக்கச் செய்து விட்டு வேணியைத் தான் திருமணம் செய்து கொள்வது அவன் திட்டம். வேணியில் அழகில் மயங்கும் நாகப்பன் அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராயிருக்கிறான்.

 

மறுநாள் காலை. மரகதத்தின் வருகைக்காக காத்திருக்கிறான் வேலன். நாகப்பன் விதித்த கெடு முடிய அரை மணி நேரமே பாக்கி. இந்நிலையில் அவ்சரமாக தவிர்க்க இயலாத காரணத்தால் வேலன் வெளியே செல்ல நேரிடுகிறது. பூபதியிடம், மரகதம் பணத்தைக் கொண்டு வந்து தருவாள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டுக் கிளம்புகிறான்.

 

இந்நேரத்தில் பூபதியைப் பார்க்க வருகிறான் நாகப்பன். வேலனிடமிருந்து பணம் வந்தாலும் அதைத் தன்னிடம் சேர்க்க வேண்டாம் எப்படியாவது தாமதம் செய்து விடு என ஆலோசனை கூறிவிட்டு நாகப்பன் சென்று விடுகிறான்.

 

குறித்த நேரத்திற்கு முன்பாகவே மரகதம் வருகிறாள். வேலனைத் தேடும் அவளிடம், அவன் இல்லை அவசரமாக சென்றிருக்கிறான், அந்தப் பணத்தை தன்னிடம் தரச்சொல்லி விட்டான், கொடுத்து விட்டுப் போ என பூபதி சொல்ல, அவளும் அவன் வார்த்தையை நம்பி பூபதியிடமே பணத்தைக் கொடுத்து விட்டுப் போகிறான்.

 

மரகதம் போன சில நேரத்தில் வேலன் திரும்புகிறான். பணம் வந்ததா மரகதம் கொடுத்தாளா எனக் கேட்க, இல்லை என மறுக்கிறார் பூபதி. அதற்குள் கெடு முடிந்து நாகப்பன் வந்து விடுகிறான். வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் ரயிலுக்கு அவனை அழைத்துச் செல்கிறான் நாகப்பன். ரயில்வே ஸ்டேஷனுக்கு மரகதம் வேணி இருவரும் ஓடி வருகிறார்கள். ஏன் நீங்கள் பணம் கட்டவில்லை என வேணி கேட்க, அவனோ குறித்த நேரத்தில் வரவில்லை அதனால் தான் போக வேண்டியிருக்கிறது எனக் கூறுகிறான்.

 

வேலனை கடுமையாக வேலை வாங்க சொல்லி நாகப்பன் தன் ஆட்களிடம் கூறுகிறான்.

 

இந்த இடைப்பட்ட நேரத்தில் பாண்டித்துரையை வேணிக்கு கல்யாணம் செய்து வைக்க ஒப்புக்கொள்ளும் கண்ணாயிரம், கோயம்புத்தூருக்கு அவனை வரச் சொல்லி விட்டு, தன் மகள் வேணியை தந்திரமாக பேசி அங்கே அழைத்துப் போகிறார். அங்கே அவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். இந்த விஷயம் நாகப்பனுக்குத் தெரிய வருகிறது. பூபதியுடன் ஆலோசித்து தந்திரமாக வேணியை வரவழைக்க திட்டம் போடுகிறான். அதன்படி, வேலனை கோயம்புத்தூருக்கு அனுப்பி, பாண்டித்துரையிடமிருந்து வேணியை மீட்க வைத்து, பின்னர் வரும் வழியில் வேலனிடமிருந்து வேணியை பிரித்து கடத்தி வந்து தான் கல்யாணம் செய்து கொள்வதாய் ஏற்பாடு செய்கிறான்.

 

அதற்கேற்ப வேலனை பணிவாக பேசி அவனைத் தூண்டி விட்டு கோயம்புத்தூருக்கு அனுப்புகிறான். இதைக் கேட்டு சந்தோஷப்படும் வேலன், வாயிற்கதவைத் தாண்டியதும் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என பொறி தட்டுகிறது. அதன் அடிப்படையில் வாசலிலேயே நாகப்பன் உரையாடலைக் கேட்கிறான். அங்கே பூபதி இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிடுகிறான். அவர்கள் இருவரின் தந்திரத்தை அறிந்து கொள்ளும் வேலன் அதை முறியடிக்க திட்டம் தீட்டுகிறான். அதை வேணியிடம் தெரிவிக்கும் வகையில் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஊழியர் மூலமாக வேணியிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறான்.

 

அந்த திட்டப்படி வேணி பாண்டித்துரையிடம் நைஸாக பேசி, அவனுக்கு சேலை கொடுத்து பெண் வேடம் போட வைக்கிறாள். தான் பேண்ட் சர்ட் அணிந்து கொள்கிறாள். அவளுடைய திட்டம் அறியாத பாண்டித்துரை அதற்கு சம்மதித்து பெண்வேடம் தரிக்கிறான்.

 

பாண்டித்துரை வேணி இருவரும் வருவதைப் பார்க்கும் நாகப்பனின் ஆட்கள் வேணி என நினைத்து பாண்டித்துரையை கடத்தி விடுகிறார்கள்.

 

அந்த ஊரை விட்டே போய் விடுகிறார்கள் வேணியும் வேலனும். இருவரும் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தைத் தொடங்குகிறார்கள்., தங்கள் பிழைப்பிற்காக தையல் கடை வைத்து தொழில் துவங்குகிறார்கள்.

 

ஒரு பக்கம் பாண்டித்துரை, ஒரு பக்கம் நாகப்பன் என இருவரும் வேணியைத் தேடியபடியே இருக்கிறார்கள்.  தந்தை கண்ணாயிரமோ மகளைப் பற்றிய தகவல் தெரியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களின் இருப்பிடம் கண்ணாயிரத்திற்குத் தெரிய வர, தன் மகளைப் பார்க்கும் ஆவலில் ஓடி வருகிறார். அதே சமயம் எப்படியாவது வேலனை நாகப்பனிடம் காட்டிக் கொடுத்து விட வேண்டும், என விரும்புகிறார்.  அந்த திட்டத்தின் படி மகள் வீட்டிற்கு வருகிறார் கண்ணாயிரம். தந்திரமாக பழகி அவர்கள் வீட்டிற்குள் போகும் கண்ணாயிபம். வேலனைப் பற்றிய தகவலை நாகப்பனுக்குத் தெரிவித்து விடுகிறார்.  நாகப்பன் ஓடி வந்து வேலனைக் கைப்பற்றி தன் தோட்டத்துப்பண்ணை வேலையில் மீண்டும் சேர்த்துவிடுகிறான்.

 

இதற்கு நடுவில் வெவ்வேறு திருப்பங்கள். நாகப்பன் கொலை செய்யப்பட்டு விடுகிறான். பழி வேலன் மீது விழுகிறது.

 

வேலன் கொலைப் பழியிலிருந்து மீண்டானா. நாகப்பனை கொன்றது யார் என்பன போன்ற கேள்விகளுக்கு படத்தில் விடை காண்க.

 

சுகம் எங்கே சில ஸ்வாரஸ்யமான செய்திகள்.

 

  1. நடிகை சாவித்திரியின் பெயர் என்ற இனிஷியலுடன் டைட்டில் கார்டில் காண்பிக்கப்படுகிறது.
  2. சந்திரபாபு தூய தமிழில் பேசி கலக்கிய படம்.

 

மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் கவனிக்க வைக்கும்.

 

       கே.ஆர்.ராமசாமி, சாவித்திரி, தங்கவேலு, பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பய்யா, டி.கே.ராமச்சந்திரன், டி.பி.முத்துலட்சுமி, சந்திரபாபு, கே.நடராஜன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

 

....

 

       பாண்டித்துரையிடமிருந்து தப்பித்து ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் செய்து வாழும் வேலனும் வேணியும் தங்கள் பிழைப்பிற்காக தையல் வேலை செய்யும் போது பாடும் பாடலே இன்றைய தொடரை அலங்கரிக்கிறது.

 

       கே.ஆர்.ராமசாமி சொந்தக் குரலில் பாட, சாவித்திரிக்கு குரல் கொடுத்திருப்பவர் ஏ.பி.கோமளா. மன்னரின் இசையில் இப்பாடல் அருமையாக இருக்கும். கண்ணில் தோன்றும் காட்சி யாவும், செந்தமிழ் நாட்டு சோலையிலே என்று ஏற்கெனவே சில பாடல்கள் பிரபலமானவை என்ற போதிலும் இதுவும் அவற்றிற்கு சற்றும் சளைத்ததல்ல. இப்பாடலின் சில குறிப்பிடத் தக்க அம்சங்கள்.

 

  1. Period Film பாணியில் இப்பாடல் வரிகளும் காட்சியமைப்பும் அந்நாளைய Fashion Trendஐ அழகாக பிரதிபலிக்கின்றன.
  2. தையல் இயந்திரத்தின் காலில் Pedalling செய்வதே இப்பாடலின் தாளக்கட்டிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
  3. பாடல் காட்சி கண்டிப்பாக பார்க்க வேண்டும். அந்த காலத்தில் Fashion ஆக விளங்கிய உடைகளைப் பற்றிய குறிப்பு பாடலில் உள்ளது. குறிப்பாக பெண்களின் Blouse Model இன்று கூட ஒரு Trend ஆக Viral ஆகலாம். க்ளோஸப்பில் பார்க்கும் போது மிகவும் வித்தியாசமான டிஸைன்.
  4. அதே போன்று ஆண்களின் உடையில் Push Coat ஐப் பத்தியும் Referencve வருகிறது.
  5. சாவித்திரி ஆணைப் போல கோட்டைப் போட்டு நடை நடக்கும் போது வெளிப்படுத்தும் கம்பீரம் அதுவும் வெறும் கையில் சிகரெட்டைப் பற்ற வைத்து வாயில் வைத்து ஊதும் பாவனை மிகவும் ருசிகரம்.
  6. அதற்கேற்ப கே.ஆர்.ராமசாமி அதைப் பற்ற வைப்பது போல் நடிப்பதும் சுவை.

 

கண்ணைக் கவரும் அழகு வலை பாடல் வரிகள் சுவாரஸ்யமான சம்பாஷணை.

https://www.youtube.com/watch?v=RWY1uemFWP0

....

 

இன்னுமொரு சிறப்பான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.     


ReplyQuote
Share: