1953..SANDIRANI / V...
 
Notifications

1953..SANDIRANI / VAN MEETHILE  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
10/03/2020 4:46 pm  

1953... சண்டிராணி / வான்மீதிலே இன்பத் தேனாறு

எம்.எஸ்.வி. அவர்கள் .. அன்றைய பிரபலமான இசை இயக்குனர் C .R . சுப்புராமன் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் . தானே அவரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் . இடையில் படம் ஒன்று இந்த இயக்குனர் மறைந்ததால் விஸ்வநாதன் ஐயாவை வைத்தே இசையமைப்பு பூர்த்தி செய்யப்பட்டது . அதற்கு முன்பாகவே T .K . ராமமூர்த்தி அவர்கள் வயலின் இசை வித்தகராக அவருக்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளார் . இது சமயம் தான் " ஸ்ரீதர்" ?? இயக்குனர் என்று நினைக்கிறன் .. M.S .V . அவர்களையும் T .K .R . அவர்களையும் இணைத்து , சேர்ந்து இசையமைத்தால் நன்றாக வரும் என ...இந்த இரட்டையர்கள் உருவாயினர் என்பது வரலாறு . அந்த இணைவே பின்னால் தமிழ்த் திரையில் முதல் சகாப்தம் ஏற்பட காரண மாயிற்று .

சரி, இந்தப் பாடல் , எனக்கு எப்போதும்போல் இலங்கை வானொலி மூலமாகவே அறிமுகம் . சொல்லப் போனால் இது நான் பிறந்த வருடம் . அந்த ரசனை மனதில் இன்னும் அப்படியேதான் . திரைக்கதை தெரியாது . காணொளியில் N .T .R . , பானுமதி அம்மா வருகிறார்கள் . பாடியது பானுமதியம்மாவும் , கண்டசாலாவும் . அன்று பெரும்பாலான திரைப்படங்கள் தெலுங்கு தமிழ் இரண்டிலுமே எடுக்கப்படும் . இன்றைக்கும் இந்த இரு மொழி படத்திற்கு ஒத்துப் போகும் ரசிகர்கள் அதிகம் .

"வான் மீதிலே"
சண்டி ராணி (1953)
பாடல் : கே.டி. சந்தானம்
இசை : சி.ஆர். சுப்புராமன், எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் : கண்டசாலா, பானுமதி...
நன்றி ...Vembar Manivannan

வான் மீதிலே இன்ப
தேன் மாரிபொழியுதே

வான் மீதிலே இன்ப
தேன் மாரி மொழியுமே

வண்ணம் சேர்க்கலாம் மதி
பேசும் வெண்ணிலாவிலே
. வான் மீதிலே இன்ப
தேன் மாரி மொழியுமே
........
வசந்தத்தில் ஆடும் உயர்செல்வம் நீயே .
மையம் கொண்டு ஆடும் தமிழ்த் தென்றல் நானே .. "

"மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும்போது .."

எனக் கண்ட சாலா அவர்கள் பாடுவது மட்டும் நல்ல தமிழ் வரிகளாகவும் ,

பானுமதியம்மா அவர்களின் இளமைத் தோற்றம் ..பாடும் வரிகள் தமிழென தெலுங்கு வாடை தட்டியே வரும் . ஆக அன்று எங்களுக்கு அன்று பொருள் பெரிதான வித்தியாசத்தில் இருக்காது . புரிந்து கொள்ளலாம் . பாடல் ராகம் , பாவம் நம்மை ஈர்த்துள்ளது என்பது ஒரு கணக்கிற்கு அல்ல , என் மனம் ரசித்த உண்மை .

பின்னாளில் M . S .V . அவர்களே இந்த மெட்டமைத்தது எனக் கேள்விப்பட்டுள்ளேன் .

என் மனத்தைத் தாலாட்டும் பதிவுகள் .. இன்னும் வருடங்கள் குறியீட்டில் தொடரும்.

கோதை

https://www.youtube.com/watch?v=pdy6R8Dv7kc

 

 


Quote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
10/03/2020 5:15 pm  
Posted by: @kothai

1953... சண்டிராணி / வான்மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே  

எம்.எஸ்.வி. அவர்கள் .. அன்றைய பிரபலமான இசை இயக்குனர் C .R . சுப்புராமன் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் . தானே அவரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் . இடையில் படம் ஒன்று இந்த இயக்குனர் மறைந்ததால் விஸ்வநாதன் ஐயாவை வைத்தே இசையமைப்பு பூர்த்தி செய்யப்பட்டது . அதற்கு முன்பாகவே T .K . ராமமூர்த்தி அவர்கள் வயலின் இசை வித்தகராக அவருக்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளார் . இது சமயம் தான் " ஸ்ரீதர்" ?? இயக்குனர் என்று நினைக்கிறன் .. M.S .V . அவர்களையும் T .K .R . அவர்களையும் இணைத்து , சேர்ந்து இசையமைத்தால் நன்றாக வரும் என ...இந்த இரட்டையர்கள் உருவாயினர் என்பது வரலாறு . அந்த இணைவே பின்னால் தமிழ்த் திரையில் முதல் சகாப்தம் ஏற்பட காரண மாயிற்று .

சரி, இந்தப் பாடல் , எனக்கு எப்போதும்போல் இலங்கை வானொலி மூலமாகவே அறிமுகம் . சொல்லப் போனால் இது நான் பிறந்த வருடம் . அந்த ரசனை மனதில் இன்னும் அப்படியேதான் . திரைக்கதை தெரியாது . காணொளியில் N .T .R . , பானுமதி அம்மா வருகிறார்கள் . பாடியது பானுமதியம்மாவும் , கண்டசாலாவும் . அன்று பெரும்பாலான திரைப்படங்கள் தெலுங்கு தமிழ் இரண்டிலுமே எடுக்கப்படும் . இன்றைக்கும் இந்த இரு மொழி படத்திற்கு ஒத்துப் போகும் ரசிகர்கள் அதிகம் .

"வான் மீதிலே"
சண்டி ராணி (1953)
பாடல் : கே.டி. சந்தானம்
இசை : சி.ஆர். சுப்புராமன், எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் : கண்டசாலா, பானுமதி...
நன்றி ...Vembar Manivannan

வான் மீதிலே இன்பத் 
தேன் மாரி பெய்யுதே  

வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே  

வண்ணம் சேர்க்கலாம் மதி
பேசும் வெண்ணிலாவிலே
. வான் மீதிலே இன்பத் 
தேன் மாரி  பெய்யுதே  
........
வசந்தத்தில் ஆடும் உயர்செல்வம் நீயே .
மையம் கொண்டு ஆடும் தமிழ்த் தென்றல் நானே .. "

"மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும்போது .."

எனக் கண்ட சாலா அவர்கள் பாடுவது மட்டும் நல்ல தமிழ் வரிகளாகவும் ,

பானுமதியம்மா அவர்களின் இளமைத் தோற்றம் ..பாடும் வரிகள் தமிழென தெலுங்கு வாடை தட்டியே வரும் . ஆக அன்று எங்களுக்கு அன்று பொருள் பெரிதான வித்தியாசத்தில் இருக்காது . புரிந்து கொள்ளலாம் . பாடல் ராகம் , பாவம் நம்மை ஈர்த்துள்ளது என்பது ஒரு கணக்கிற்கு அல்ல , என் மனம் ரசித்த உண்மை .

பின்னாளில் M . S .V . அவர்களே இந்த மெட்டமைத்தது எனக் கேள்விப்பட்டுள்ளேன் .

என் மனத்தைத் தாலாட்டும் பதிவுகள் .. இன்னும் வருடங்கள் குறியீட்டில் தொடரும்.

கோதை

https://www.youtube.com/watch?v=pdy6R8Dv7kc

 

 

 


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 78
10/03/2020 5:39 pm  

அன்பு சகோதரிக்கு

அருமையானப் பாடல் .
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் பொழுது திரு சுப்பராமன் இறக்க அவர் உதவியாளர்களாய் இருந்த பின்னாளில் மெல்லிசை மன்னர்கள் என அறியப்பட்ட MSV TKR தேவதாஸ் ,சண்டி ராணி போன்றப் படங்களை முடித்து தந்தனர்
அந்த இசைக் கோர்வையை பார்த்து 24 வயது திறமையை உணர்ந்து கூறிய வார்த்தைகள் தான் இவை

He is a Creative Genius!" - Banumathi

அதனை கடைசி வரை மறக்காமல் குறிப்பிடுவார் MSV . அந்த நன்றி மறவாமல் பானுமதி உடல் சரியில்லாமல் இருக்கையில் மெல்லிசை மன்னரை அழைத்து பாட சொல்லிக் கேட்பாராம் பல்கலை வித்தகி நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அண்ணாவால் அழைக்கப்பட்டு திரை உலகில் Terror ஆன திருமதி பானுமதி
அது மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திற்கும் அவரையே இசை அமைக்க சொன்ன பெருமை பானுமதியையே சாரும்
பின்னாளில் திரு NSK பணம் படத்திற்க்கு MSV யை இசை அமைக்க கூப்பிட்டதற்கு இந்தப் பாடமும் பெரு காரணம்

ஸ்ரீ 60 களில் தான் வருகிறார் நெஞ்சில் ஒரு ஆலயம் மூலமாக

https://youtu.be/fIOOK9QCb7k

மேலுள்ள இணைப்பு உங்களுக்கு மூன்று மொழியிலும் இந்தப் பாடலைத் தரும் .

மெல்லிசை மன்னர் நினைவினையும் நாம் கேட்டு மகிழலாம்

வாய்ப்பிற்கு நன்றி

best Regards
vk


ReplyQuote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
10/03/2020 6:03 pm  

@v-k    மன நெகிழ்வுடன் நன்றி . you have given much more details , thank you for them also.   

 


ReplyQuote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 105
11/03/2020 12:39 am  

Dear friends        A small correction . Sridhar's  entry as Director in TF was in "KALYAANA PARISU" 1959.  as a playwright in TF he has a Dateless Diary with a polite record of success all over.  As regards V and R combination kalaivaanar NSK is credited. 

Regards    K.Raman     Madurai


Kothai liked
ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 78
11/03/2020 1:36 am  

Dear prof

நான் சொல்ல வந்தது மெல்லிசை மன்னர்கள் கூட இணைதல் NOA

நான் சரிவர சொல்லவில்லை. வருந்துகிறேன். சுட்டிக் காட்டிய மைக்கு நன்றி 

best Regards
vk


ReplyQuote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
14/03/2020 3:33 pm  

@k-raman thank you very much to clarify the doubt . yes sridhar entry was in kalyana parisu 1959. understood.  kalaivanar nsk .. a great personlity really had taken a wonderful effort in uniting MSV & TKR. Nice information .

 


ReplyQuote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
14/03/2020 3:35 pm  

@k-raman thank you very much to clarify the doubt . yes sridhar entry was in kalyana parisu 1959. understood.  kalaivanar nsk .. a great personlity really had taken a wonderful effort in uniting MSV & TKR. Nice information .

 


ReplyQuote
ksdilip
(@ksdilip)
New Member
Joined: 2 days ago
Posts: 1
03/04/2020 7:20 pm  

If i am right, Illayaraja credited this song as an inspiration for his song "Vaa Vennila , Unnaithane" in a public program.  


ReplyQuote
Share: