சண்டிராணி / வான்மீத...
 
Notifications
Clear all

சண்டிராணி / வான்மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே.. 1953...  

  RSS

kothai
(@kothai)
Eminent Member
Joined: 3 months ago
Posts: 45
05/10/2020 1:52 am  

சண்டிராணி / வான்மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே

எம்.எஸ்.வி. அவர்கள் .. அன்றைய பிரபலமான இசை இயக்குனர் C .R . சுப்புராமன் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் . தானே அவரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் . இடையில் படம் ஒன்று இந்த இயக்குனர் மறைந்ததால் விஸ்வநாதன் ஐயாவை வைத்தே இசையமைப்பு பூர்த்தி செய்யப்பட்டது . அதற்கு முன்பாகவே T .K . ராமமூர்த்தி அவர்கள் வயலின் இசை வித்தகராக அவருக்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளார் . இது சமயம் தான் " ஸ்ரீதர்" ?? இயக்குனர் என்று நினைக்கிறன் .. M.S .V . அவர்களையும் T .K .R . அவர்களையும் இணைத்து , சேர்ந்து இசையமைத்தால் நன்றாக வரும் என ...இந்த இரட்டையர்கள் உருவாயினர் என்பது வரலாறு . அந்த இணைவே பின்னால் தமிழ்த் திரையில் முதல் சகாப்தம் ஏற்பட காரண மாயிற்று .
சரி, இந்தப் பாடல் , எனக்கு எப்போதும்போல் இலங்கை வானொலி மூலமாகவே அறிமுகம் . சொல்லப் போனால் இது நான் பிறந்த வருடம் . அந்த ரசனை மனதில் இன்னும் அப்படியேதான் . திரைக்கதை தெரியாது . காணொளியில் N .T .R . , பானுமதி அம்மா வருகிறார்கள் . பாடியது பானுமதியம்மாவும் , கண்டசாலாவும் . அன்று பெரும்பாலான திரைப்படங்கள் தெலுங்கு தமிழ் இரண்டிலுமே எடுக்கப்படும் . இன்றைக்கும் இந்த இரு மொழி படத்திற்கு ஒத்துப் போகும் ரசிகர்கள் அதிகம் .
"வான் மீதிலே"
சண்டி ராணி (1953)
பாடல் : கே.டி. சந்தானம்
இசை : சி.ஆர். சுப்புராமன், எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் : கண்டசாலா, பானுமதி...
நன்றி ...Vembar Manivannan
வான் மீதிலே இன்பத்
தேன் மாரி பெய்யுதே
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே
வண்ணம் சேர்க்கலாம் மதி
பேசும் வெண்ணிலாவிலே
. வான் மீதிலே இன்பத்
தேன் மாரி பெய்யுதே
........
வசந்தத்தில் ஆடும் உயர்செல்வம் நீயே .
மையம் கொண்டு ஆடும் தமிழ்த் தென்றல் நானே .. "
"மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும்போது .."
எனக் கண்ட சாலா அவர்கள் பாடுவது மட்டும் நல்ல தமிழ் வரிகளாகவும் ,
பானுமதியம்மா அவர்களின் இளமைத் தோற்றம் ..பாடும் வரிகள் தமிழென தெலுங்கு வாடை தட்டியே வரும் . ஆக அன்று எங்களுக்கு அன்று பொருள் பெரிதான வித்தியாசத்தில் இருக்காது . புரிந்து கொள்ளலாம் . பாடல் ராகம் , பாவம் நம்மை ஈர்த்துள்ளது என்பது ஒரு கணக்கிற்கு அல்ல , என் மனம் ரசித்த உண்மை .
பின்னாளில் M . S .V . அவர்களே இந்த மெட்டமைத்தது எனக் கேள்விப்பட்டுள்ளேன் .
என் மனத்தைத் தாலாட்டும் பதிவுகள் .. இன்னும் வருடங்கள் குறியீட்டில் தொடரும்.

கோதை
https://www.youtube.com/watch?v=pdy6R8Dv7kc


Quote
Share: