மின்னணு யுகத்தில் மெல்லிசை மன்னர்

 

MANNAR KUDUMBAM, ENGAL MSV - MSV ONLY, BGM RERECORDING, VISWA SRIDHAR, M.M.F.A., MSVTIMES.COM, என பல வாட்ஸப் குழுக்கள், WWW.msvtimes.com, www.mellisaimannar.in, என இணைய தளங்கள், மற்றும் முகநூலில் மன்னரின் சிறப்பைப் போற்றும் ஏராளமான குழுக்கள்...நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் பெருகி வரும் மன்னரின் புகழ் இன்னும் பல நூற்றாண்டுகளில் பல்வேறு பரிமாணங்களோடு வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை. மன்னரின் பாடல்களில் அவர் வாழ்கிறார். இன்னும் பல நூற்றாண்டுகளானாலும் அவர் புகழ் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். என்பதையே இவையெல்லாம் எடுத்தியம்புகின்றன.

 

எங்கள் எம்.எஸ்.வி., மன்னர் குடும்பம், எம்எஸ்விடைம்ஸ் என பல்வேறு வாட்ஸப் குழுங்களில் மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் மன்னர் சிறப்பை நாள்தோறும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். எங்கள் எம்எஸ்வி குழுவில் விஜய்முரளி மற்றும் ராஜேஷ் இருவரும் இரவின் மடியில் என்ற தலைப்பில் பாடல்களைப் பல்வேறு தலைப்புகளில் தொகுத்து சிறப்புற வழங்கி வருகிறார்கள். அதே போல் இக்குழுவில் மன்னரின் பாடல்களில் அதிகம் ஒலிபரப்பப்படாத அல்லது மக்கள் அதிகம் அறிந்திராத சில பாடல்கள் அபூர்வ ராகங்கள் என்கிற தலைப்பில் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து புத்தாண்டு முதல் முகப்பிசை முதல்வர் என்கிற தலைப்பில் மன்னரின் திரைப்பட முகப்பிசைகள் தொகுத்து பகிர்ந்து கொள்ளப்பட்டு அவற்றின் சிறப்பு, அவற்றிலுள்ள நுணுக்கங்கள் ஆகியவையும் பகிர்ந்து கொள்ளப்டுகின்றன.

 

மன்னர் குடும்ப வாட்ஸப் குழுவில் அதிகாலை 6.00 மணிக்கு உறுப்பினரொருவர் மூன்று பாடல்களைத் தொகுத்து பொங்கும் பூம்புனல் என்கிற தலைப்பில் வழங்கப்படும் தொடரில் பகிர்ந்து கொள்கிறார். மாலை சுமார் 7 மணிக்கு இரு குழுக்களிலும் திரையிசைப்புதிர்ப் போட்டி நடத்தப்படுகிறது. நண்பர்கள் சபேசன், பாபுஜீ, எஸ்.வி.ரமணி ஆகியோர் புதிரை நடத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பரணிதரன் அவர்கள் கேட்க மறந்த கானங்கள் நிகழச்சியில் அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொள்கிறார். இரவு 9.00 மணிக்கு நண்பர் ஸ்வாமிநாதன் அவர்கள் நேயர் விருப்பம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

 

இதுவரை இக்குழுக்களில் இணைந்து கொள்ளாதோர் விரும்பினால் குழு நிர்வாகியைத் தொடர்பு கொள்க. விரைவில் தொடர்பு தொலைபேசி எண்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

 

மன்னர் புகழ் வாழ்க!

 

Prasar Bharati releases classic audio CD

 

Delving deep into its archive, Prasar Bharati on Wednesday released CDs containing audio recordings of four prominent personalities — Emani Sankara Sastry, M.S. Viswanathan, Tanjore S. Kalyanaraman and Thenkachi Ko. Swaminathan.

Releasing the mp3 CDs, Suresh Chandra Panda, Member (personnel), Prasar Bharati, said there were over four lakh hours of audio and video of valuable archival content with the All India Radio and Doordarshan.

He said the CDs were available online too.

E. Gayathri, vice-chancellor, Tamil Nadu Music and Fine Arts University, recalled how Mr. Sastry had encouraged her. “If I have been able to play the Veena on my way to school at AIR it was because of him,” she recalled.

 
courtesy: The Hindu online page: http://www.thehindu.com/news/cities/chennai/prasar-bharati-releases-classic-audio-cd/article9248129.ece
 

M S Viswanathan fans form charitable trust

Friday, 21 October 2016
 

Chennai: Fans of legendary music composer M S Viswanathan have formed a charitable trust in the name of the association they run in his memory, the Mellisai Mannar Fans Association.

According to a note from trustee M R Vijayakrishnan, the MMFA Trust would oversee the operations of the association.

The loosely organised group was made into an association and launched recently to bring MSV’s fans all over the globe under one banner, he says.

The trust, which will be managed by M S Sekar, Ram N Ramakrishnan, Balasubramanian, V Ganesh and Vijayakrishnan, plans to do charitable work in the name of MSV.

These include:

* Stipend and scholarships  for poor children of musicians, music students

* Competition for students  of music schools and colleges

* Help for researchers exploring MSV’s works

* Institution of awards  for best singers / composer in a State-level competition

* Popularising the compositions through radio and TV channels

The trustees plan to achieve all this through subscriptions and donations. The members will have to pay a subscription of Rs 2,000 per annum. A part of the amount will be spent to conduct programmes, some for charity work and the balance, towards the corpus fund, they said.

Interested MSV fans can mail mmfatrust@gmail.com or SMS 9962276580/9710834379 for membership details.

MSV's daughter-in-law Jennet Haridoss participated during the inauguration of the trust.

 
Courtesy: News Today Online page at: http://newstodaynet.com/chennai/m-s-viswanathan-fans-form-charitable-trust
 
M.M.F.A. (Mellisai Mannar Fans Association) - மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து துவக்கியுள்ள இந்த புதிய அமைப்பின் துவக்க விழா கடந்த 10.10.2016 திங்கள்கிழமை விஜயதசமி அன்று சிரப்புற நடைபெற்றது. இந்த அமைப்பினைப் பற்றி தலைவர் திரு விஜயகிருஷ்ணன் அவர்களின் அறிமுக அறிக்கை கீழே தரப்படுகிறது. விழாவில் 1974-1979 ஆண்டு கால கட்டத்தில் மன்னர் இசையில் கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களிலிருந்து சில பாடல்கள் தொகுத்து ஒளிபரப்பப்பட்டன. பாடல்களை திரு சபேசன் தேர்வு செய்ய திரு ராஜேஷ் அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் இணைப்புரை வங்கினார். மேலும் இந்த அமைப்பிற்காக M.M.F.A. என்ற பெயரில் Whatsapp Group ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உறுப்பினராவோர் இந்தக் குழுவில் இடம் பெறுவர்.
 

M.M.F.A. அமைப்பினைப் பற்றி தலைவர் திரு விஜயகிருஷ்ணன் அவர்களின் அறிமுக அறிக்கை

 

Dear Friends

GREETINGS

As you may be aware   we have inaugurated   MMFA on 10/10/2016
For the benefit of those who  did not attend the inaugural function , i would like to say a few lines of what we intend to do

The association will not only be engaged itself to conduct  various programs of Mellisai Mannar's compositions  at regular intervals  but also would take steps to take MSV music to next generations MSV-GENNEXT through competitions ,special programs etc .
Passing MSV to GENNEXT is passing wealth to them as what we gained we pass it on .
In addition we are planning to do charity in his name like
a) Feeding poor children on his birth and on the date he left us physically
b) Medical   treatment to old
c) Educating to poor students if they want to do in any school/college
d) Any other as the trust decides

This is in addition to minimum 4 programs  - 2 interactions with legends , one live music  and another fan’s program  on mannar

Depending on the response the number of programs will increase.

The activities of the MMFA will be under MMFA trust . there are five Trustees selected  They are
M/s  1. M S..Sekar ( C A IIM past president  Madras Management Association )mridangam player
2. Ram.N.Ramakrishnan (C A,consultant ) Harmonica Player, orator
3. Balasubramaniam  ,v   (CA GM The Hindu ) veena player ,singer,music critic ,prolific writer,presenter
4  .Ganesh .V                 (CA , heading Asian Operations of japanese Giant Sumitomo corporation)
5.  M,R,Vijayakrishnan    -Business executive - GM of a textile export company
The trustees will retire by rotation  so new trustees will be inducted once in 3 years
Under the trust various committees will be  formed who will run the operations , the members of various committee will be  announced soon on getting the applications  ,

We have proposed to collected minimum annual donation of   Rs 2000 . which will entitle free entry to all the programs of   MMFA through out the year of donation
The money so collected would be  spent on activities mentioned above ,
The accounts of the trust will be audited every year and the accounts would be sent to the members

we assure a transparent highly receptive  operations

Those who are interested can fill up the form which can be obtained by writing to mmfatrust@gmail.com or messaging 9710834379/9962276580 your email id

Kindly fill up the form and send to us we can advise the Bank details on receipt

Looking forward to your participation in a  MSV movement - MSV GEN NEXT

with personal regards

m.r vijayakrishnan

MMFA Trust .

 
M.M.F.A. அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புவோர், இந்த இணைப்பில் தரப்பட்டுள்ள படிவத்தினை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு அதற்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் செலுத்த வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, கைப்பேசி எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரி யாவும் விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ளன.
 

M.M.F.A. அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

 

MSVTimes சார்பில் 2016 ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நடத்தப்பெற்ற REFLECTIONS நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. குறிப்பாக மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் அங்கம் வகித்த திரு தாமஸ் அவர்கள் தம் குழுவினரோடு பார்வையாளர்களுக்கு மெய்மறக்கும் இசை விருந்தளித்ததோடு அந்த இசைக்கருவிகளின் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு. நன்றி MSVTIMES. மேலும் நிழற்படங்கள் விவரங்கள், நிகழ்வுகள் செய்திகள் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

 
 
 
 
 
 

மேற்காணும் இணைப்புகள் விரைவில் தரப்படும்..

 
திரை இசை என்றால் அவ்வளவாக வரவேற்பும் நல்லெண்ணமும் நிலவியிராத கால கட்டத்தில் அதைப் பற்றிய கருத்துக்கள் மக்கள் மனதில் காரிருளாய் சூழ்ந்திருந்த நேரத்தில் அவ்விருள் போக்க வந்த ஒளியாய் உதித்தவர் மெல்லிசை மாமன்னர். அதே போல தொல்லிசையாகவே ஒலித்து வந்த திரையிசையை மெல்லிசையாய் வடிவமைத்து மக்களின் செவி வழியே அவர்களின் உள்ளத்தில் நுழைந்து நிரந்தரமாய்க் குடியேறியவரும் மெல்லிசை மன்னரே. தமிழ்த்திரையுலக வரலாற்றை எழுதும் போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களைத் தவிர்த்து எழுத முடியாது என்கிற அளவிற்கு வரலாற்றில் பெரும் பங்களித்தவர் மெல்லிசை மன்னர். அவருடைய பங்களிப்பினை விரிவாக அவருடைய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் பட்டியல், நிகழ்வுகள், செய்திகள், அந்நாளைய நிழற்படங்களின் மூலம் நெஞ்சில் நிழலாடும் நினைவலைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது இவ்விணைய தளத்தின் தலையாய பணியாயிருக்கும். மெல்லிசை மன்னரின் புகழை இன்றைய இணைய யுகத்தில் நீக்கமறக் காண்கிறோம் என்றால் அதற்கு தலையாய மற்றும் பெரும்பங்காற்றியது, அவரே தன்னுடைய குழந்தையாய் பாவித்த எம்எஸ்விடைம்ஸ் இணையதளமாகும். அந்த எம்எஸ்விடைம்ஸ் கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வரும் பணிக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்து இவ்விணைய தளம் தன்னுடைய பணியைத் தொடர்கிறது. எம்எஸ்விடைம்ஸ் இணையதளம் வகுத்துள்ள பாதையிலேயே இவ்விணைய தளத்தின் பயணமும் இருக்கும்.இவ்விணையதளத்தில்,  தவிர்க்க இயலாத இடங்களைத் தவிர பெரும்பாலும் தகவல்கள் தமிழிலேயே இருக்கும். தொடர்பு மின்னஞ்சல் முகவரியில் தங்களுடைய மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். மேலும் தங்கள் பகுதியில் மெல்லிசை மன்னரின் சிறப்பை நினைவு கூறும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் நிழற்படங்களையும் அனுப்பினால் அவை இங்கு இடம் பெறும். நன்றி.
 
 
மெல்லிசை மன்னர் இணைய தளத்தில் வரும் நாட்களில் இணைய இருப்பவை...
 
இசை அலைகள் பகுதியில் மெல்லிசை மன்னர் உருவாக்கிய பாடல்கள், திரைப்படங்களுக்கு அவர் அளித்த முகப்பிசை, பின்னிசை, ஊடிசை, பக்திப்பாடல்கள், தனிப்பாடல்கள், தனி இசைத் தொகுப்புகள் முதலியவற்றிற்கான இணைப்புகள் இடம் பெற உள்ளன.
 
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் இணை பிரியா சகோதரர் திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களின் திரையிசைப் பணிகளைப் பற்றிய தனிப்பகுதி..
 
தமிழ்த்திரையுலகில் இதர இசையமைப்பாளர்கள் பற்றிய அறிமுகம்
 
திரையிசை வரலாறு...
 
மெல்லிசை மன்னருக்கு ரசிகர்கள், இசைக்குழுவினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்களின் புகழஞ்சலி..
 
நினைவலைகள் பகுதி விஸ்தரிப்பு.. ஆவணங்கள் அந்நாளைய நிழற்படங்கள்...
 
இன்னும் பல..